பக்கம் எண் :

                       
குணமாலையார் இலம்பகம் 591 

   (இ - ள்.) சேலை வென்ற கண்ணாட்கு - சேல்மீனை வென்ற கண்ணையுடைய குணமாலைக்கு; இவை செப்ப அரிது - (அவள் வருத்தம் எல்லாம் நீங்குமாறு) இவற்றையெல்லாம் கூறுதல் அரிது; நீ ஓலை ஒன்று எழுதிப் பணி என - நீ ஒரு திருமுகம் எழுதிக்கொடு என்று (கிளி) சொல்ல; மாலை மார்பன் தினைக் குரல்ஓலையோடு கொடுப்ப - மாலை அணிந்த மார்பன் அவ்வாறே எழுதிப் பிறர் ஐயுறாமல் தினைக்கதிரில் வைத்த திருமுகத்தையும் தன் ஆழியையும் கொடுத்தவுடன்; கொண்டு ஓங்கிப் பறந்ததே - எடுத்துக் கொண்டு வானிடை உயர்ந்து பறந்தது.

 

   (வி - ம்.) மேல் ,'நாம மோதிரந் தொட்டு' (சீவக. 1040) என வருவதால் 'ஓலை ஒன்று' என்னுமிடத்து ஒன்றென்பதற்கு 'ஆழி' எனப் பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர்.

 

   சீவகன் கூற்றைத் தான் கேட்டுச் சென்று கூறும் சொற்களினும் சீவகன் கையால் எழுதிய ஓலையே அவள் துயரத்தை நன்கு தீர்ப்பதாகும் என்று கருதிக் கிளி ஓலைவேண்டிற்று என்க.

( 182 )
1033 திருந்து கோதைச் சிகழிகைச் சீறடி
மருந்தின் சாயன் மணங்கமழ் மேனியாள்
பொருந்து பூம்பொய்கைப் போர்வையைப் போர்த்துடன்
கருங்கட் பாவை கவின்பெற வைகினாள்.

   (இ - ள்.) திருந்து கோதை சிகழிகைச் சீறடி - திருந்து கோதையையும் மயிர் முடியையும் சிற்றடியையும்; மருந்தின் சாயல் மணம் கமழ் மேனியாள் - அமுதமனைய மென்மையையும் மணம் வீசும் மேனியையும் உடைய தத்தை; பொருந்து பூம் பொய்கைப் போர்வையை உடன் போர்த்து - பொருந்திய மலர்ப் பொய்கை வடிவமாக எழுதிய போர்வையை மெய்ம்முழுதும் போர்த்து; கருங்கண் பாவை கவின்பெற வைகினாள் - கருங்கண்ணாளாகிய அவள் (சினந்து) விழித்துக் கிடந்தாள்.

 

   (வி - ம்.) மருந்து - அமுதம்; 'அமிர்தன்ன சாயல்' (சீவக. 8) என்றதன் குறிப்பை நோக்குக. 'பொய்கைபோலும் கண்ணீர்ப் போர்வை' எனலும் ஆம்.

( 183 )
1034 மறங்கொள் வெங்கதிர் வேலவன் வார்கழல்
கறங்க வேகித்தன் காதலி யூடலை
யுறைந்த வொண்மலர்ச் சென்னியி னீக்கினா
னிறைந்த தின்ப நெடுங்கணிக் கென்பவே.

   (இ - ள்.) மறம்கொள் வெம்கதிர் வேலவன் - போருக்குரிய வெய்ய கதிர்களையுடைய வேலவனான சீவகன்; வார்கழல் கறங்க ஏகி - (கிளி சென்ற பின்னர்) நீண்ட கழல் ஒலிக்கச் சென்று;