| குணமாலையார் இலம்பகம் |
593 |
|
|
(இ - ள்.) செந்தார்ப் பசுங்கிளியார் சென்றார்க்கு - சிவந்து மாலையை உடைய பைங்கிளியாராகிய போனவர்க்கு; ஓர் இன்னுரைதான் தந்தாரேல் - ஓர் இனிய மொழியை அவர் கூறினாரெனின்; என் இன்உயிர் தந்தார் - எனக்கு இனிய உயிரையே அளித்தவராவார்; அந்தோ! தாம் தாராரேல் - ஐயோ! அவர்தாம் கூறாரெனின்; குணமாலைக்கு ஆ தகாது என்று - குணமாலைக்கு இத் துன்பம் வ்ரலாகாது என்று; உலகம் நொந்து அழ - உலகம் வருந்தியிரங்க; முயன்று - முயற்சி செய்து; நோற்றானும் அங்கு எய்துவனே - தவம் செய்தாயினும் அவரை அடைவேனோ? (அம் முயற்சியில் இறந்துபடுவேன்.)
|
|
|
(வி - ம்.) செந்தார் - கழுத்தில் உள்ள கோடு. 'கிளியார்' என உயர்திணையாற் கூறல் ஒன்றென முடித்தலாற் கொள்க. எய்துவனே: ஏ: எதிர்மறை. அந்தோ! ஆ: இரக்கக் குறிப்பிடைச் சொற்கள்.
|
|
|
நச்சினார்க்கினியர், ”அங்ஙனங் கூறாராயின் அவ்விடத்து யான் சுரமஞ்சரியைப் போலே முயன்று தவஞ்செய்தாயினும் பின்பு எய்து வேனோ? 'ஆ! குணமாலைக்கு இவ்விறந்துபாடு தகாதென்று உலகம் நொந்து அழும்படி இறந்துபாட்டை எய்துவேன் அன்றோ?” என்று கருதினாள்” என்று பொருள் கூறுவர்.
|
|
|
முன் நிகழ்ச்சியிற் சுரமஞ்சரி தவஞ்செய்வேன் என்று மனத்திற் கொண்டு குணமாலையுடன் மாறுபட்டுச் சென்றனளேனும், அவள் மனக்கோள் குணமாலைக்குத் தெரிந்திருக்க இடமில்லை.
|
( 186 ) |
| 1037 |
சென்றார் வரைய கருமஞ் செருவேலான் |
| |
பொன்றாங் கணியகலம் புல்லப் பொருந்துமேற் |
| |
குன்றாது கூடுகெனக் கூறிமுத்த வார்மணன்மே |
| |
லன்றாங் கணியிழையா ளாழி யிழைத்தாளே. |
|
|
(இ - ள்.) கருமம் சென்றார் வரைய - வினையின் முடிவு வினைமேற் சென்றவரின் அறிவின் திறனளவாய் இருக்கும். ('என் கிளி பேதையாதலால் எங்ஙனமோ?' என்றெண்ணி) செருவேலான் ; பொன் தாங்கு அணி அகலம் புல்லப் பொருந்துமேல் - போர் வேலானுடைய அணியேந்திய அழகிய மார்பம் என்னைத் தழுவக் கூடுமாயின்; குன்றாது கூடுக எனக் கூறி - தவறாமற் கூடுவதாக என்றுரைத்து; ஆங்கு முத்த ஆர்மணல் மேல் - அவ்விடத்தே முத்துக்கள் நிறைந்த மணல்மேல்; அன்று - அதனைப் போகவிட்ட அப்போது; அணி இழையாள் ஆழி இழைத்தாள் - குணமாலை கூடற்சுழி தீட்டத் தொடங்கினாள்.
|
|
|
(வி - ம்.) கருமம் சென்றார் வரைய என மாறுக. கருமம் சென்றார் வரைய என்றது என்பொருட்டுச் சென்ற கிளி பேதையே ஆதலின் அஃது அக்கருமத்தை முடித்துக்கொண்டு வருதல் ஒரு தலையன்றென்பதுபட நின்றது. கூடலிழைத்தலாவது - வருவரோ
|
|