பக்கம் எண் :

                       
குணமாலையார் இலம்பகம் 595 

வைத்துக் கொண்டாள் ; நுண்தார்ப் பசுங்கிளியை நோவ அகட்டு ஒடுக்கி - நுண்ணிய செவ்வரி கழுத்திற் பொருந்திய கிளியை அது வருந்துமளவு வயிற்றில் அணைத்துக்கொண்டு ; வண்தாரான் செவ்வி வாய்க் கேட்டாள் - செழுவிய மாலையான் நிலையை அதன் வாய்மொழியாலே கேட்டாள்; தன் மெய்ம் மகிழ்ந்தாள் - தன் உடல் குளிர்ந்தாள்.

 

   (வி - ம்.) அன்பினால் வயிற்றில் அணைத்தாள். தினைக்கதிரிலே மோதிரமும் ஓலையும் இருந்தனவாகையால் தனியே ஓய்வாக அமர்ந்து படிக்க எண்ணித் தன் குழலிலே வைத்துக்கொண்டாள். 'கையகத்தே கொண்டாள்' என்பதற்குக், 'கையிலே ஆழியை மறையக் கொண்டாள்' என்று பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர். ஆழி தனியே கொண்டு வரப்பட்டதென்று அவர் கருதியிருத்தல் வேண்டும்.

 

   இஃதென் கூறுமோஎன் றையுற்று உயிர்த்தாள் என்க. ஓலையிருக்கும் என்னுந் துணிவால் கைதொழுதாள் என்க. நுண்தார் - நுண்ணிய (கழுத்து) வரை. தாரான்: சீவகன். செவ்வி - ஈண்டு நிலைமை.

( 189 )
1040 தீம்பா லமிர்தூட்டிச் செம்பொன் மணிக்கூட்டிற்
காம்போ் பணைத்தோளி மென்பறவை கண்படுப்பித்
தாம்பான் மணிநாம மோதிரந்தொட் டையென்னத்
தேம்பா வெழுத்தோலை செவ்வனே நோக்கினாள்.

   (இ - ள்.) காம்பு ஏர் பணைத்தோளி - மூங்கிலனைய அழகிய பருத்த தோளினாள் ; மென்பறவை தீ பால் அமிர்து ஊட்டி - மென்மையான கிளியை, இனி பாலாகிய உணவை ஊட்டி ; செம்பொன் மணிக்கூட்டில் கண் படுப்பித்து - மணிகள் இழைத்த பொற்கூட்டிலே துயிலச் செய்து; ஆம் பால் மணி நாமம் மோதிரம் தொட்டு - ஆம் பகுதியையுடைய சீவகனென்னும் பெயர் பொறித்த ஆழியை எடுத்து அணிந்து கொண்டு ; ஐ என்ன - விரைவாக; தேம்பா எழுத்து ஓலை செவ்வனே நோக்கினாள் - வருந்தாத எழுத்துள்ள ஓலையைச் செவ்வனே பார்த்துப் படிக்கின்றாள்.

 

   (வி - ம்.) 'தேம்பாமைக்குக் காரணமான ஓலை' எனினும் ஆம்.

 

   காம்பு -மூங்கில். ஏர் : உவம உருபு. பணை - பருத்த. மென்பறவை : ஈண்டுக் கிளி. ஆம்பால் - ஆகும் பகுதி. நாமமோதிரம் - பெயர் பொறிக்கப்பட்ட மோதிரம். ஐஎன்ன : விரைவுக் குறிப்பு.

( 190 )
1041 கொடுஞ்சிலையா னோலை குணமாலை காண்க
வடுந்துயர முள்சுடவெந் தாற்றாதே னாற்ற
விடுந்த சிறுகிளியால் விம்மனோய் தீர்ந்தே
னெடுங்கணா டானு நினைவகல்வா ளாக.