| குணமாலையார் இலம்பகம் |
596 |
|
|
(இ - ள்.) கொடுஞ்சிலையான் ஓலை - வளைந்த வில் ஏந்திய சீவகன் விடுக்கும் ஓலை; குணமாலை காண்க - குணமாலை காண்பாளாக, அடும் துயரம் உள்சுட வெந்து ஆற்றாதேன் ஆற்ற - காமநோய் உள்ளத்தைச் சுடுதலாலே வெந்து ஆற்றாதன் நான் ஆற்றுமாறு; விடுந்த சிறுகிளியால் விம்மல் நோய் தீர்ந்தேன் - தான் வரவிட்ட சிறுகிளியினால் யான் மிக்க வருத்தத்திலிருந்து நீங்கினேன்; நெடுங்கணாள் தானும் நினைவு அகல்வாள் ஆக - நீண்ட கண்களையுடைய அவளும் வருத்தமிகா தொழிவாளாக.
|
|
|
(வி - ம்.) 'கொடுஞ்சிலையான்' எனத் தற்புகழ்தல் தகுமென்பதை முன்னரே (சீவக. 1031) கூறினாம். 'இன்னார் ஓலை இன்னார் காண்க என்றல் முறைமை. விடுந்த : விட்ட என்பதன் விகாரம்.
|
|
|
கொடுஞ்சிலையான் என்றது சீவகன் என்னும் பெயர்ப் பொருட்டாய் நின்றது.
|
( 191 ) |
| 1042 |
ஈட்டஞ்சா னீணிதியு மீர்ங்குவளைப் பைந்தடஞ்சூழ் |
| |
மோட்டு வளஞ்சுரக்கு மூரு முழுதீந்து (மென்றோட் |
| |
வேட்டார்க்கு வேட்டனவே போன்றினிய வேய் |
| |
பூட்டார் சிலைநுதலாட் புல்லா தொழியேனே. |
|
|
(இ - ள்.) ஈட்டம்சால் நீள்நிதியும் - அறத்திற் சேர்க்கப் பட்ட பெருஞ் செல்வத்தையும்; ஈர்ங்குவளைப் பைந்தடம் சூழ் மோட்டுவளம் சுரக்கும் ஊரும் - தண்ணிய குவளை நிறைந்த பசுந்தடங்கள் சூழ்ந்து உயரிய செல்வத்தைப் பெருக்கும் ஊரையும் ; முழுது ஈந்து- (குரவர் விரும்பியவாறு) முற்றவும் நல்கி ; பூட்டு ஆர் சிலை நுதலாள் - பூட்டப்பட்ட வில்லனைய புருவத்தாளின், வேட்டார்க்கு வேட்டனவே போன்று இனிய - விரும்பினார்க்கு விரும்பினவை போல, இனிமையான ; வேய்மென் தோள் - மூங்கில் அனைய மெல்லிய தோள்களை ; புல்லாது ஒழிவேனே - தழுவாமல் விலகுவேனோ?
|
|
|
(வி - ம்.) ”சிலைநுதலாளைத் தோளைப் புல்லாதொழியேன்” எனக் கூட்டி நச்சினார்க்கினியர் பொருள் கொண்டார். இங்ஙனம் இரண்டனுருபு முதலுககும் சினைக்கும் வருதல் ”முதன்முன் ஐவரின்” என்ற சூத்திரத்தில், 'தௌ்ளிது' (தொல். வேற்றுமை மயங். 5) என்பதனாற் கொள்க.
|
|
|
ஈட்டஞ்சால் என்றது, அறத்தால் ஈட்டமமைந்த என்பது படநின்றது. நீள்நிதி - பெருஞ்செல்வம். மோட்டுவளம் - பெருவளம்.
|
|
| |
”வேட்டபொழுதின் அவையவை போலுமே |
|
| |
தோட்டார் கதுப்பினாள் தோள்” (குறள்: 1105) |
|
|
என்றார் திருவள்ளுவனாரும்.
|
( 192 ) |