| குணமாலையார் இலம்பகம் |
599 |
|
|
(வி - ம்.) குழலினாளை - குணமாலையை. அவ்வை - தாய். அவ்வைக்கு - மூத்தவனான நின் மாமன் என்க. நகைமுகவிருந்து என்றது உடன்பாடு என்னும் பொருளின்மேனின்றது. நின்னைக் கொடுப்பதாக உடன்பட்டான் என்பது கருத்து.
|
( 196 ) |
| 1047 |
பண்டியாற் பண்டி செம்பொன் |
| |
பல்வளை பரிய மாகக் |
| |
கொண்டுவந் தடிமை செய்வான் |
| |
குறையுறு கின்ற தன்றிக் |
| |
கண்டவர் கடக்க லாற்றாக் |
| |
கிழிமிசை யுருவ தீட்டி |
| |
வண்டிமிர் கோதை நின்னை |
| |
வழிபடு நாளு மென்றாள். |
|
|
(இ - ள்.) பல்வளை! வண்டு இமிர் கோதை! - பல்வளைகளை உடையாய்! வண்டுகள் முரலும் கோதையாய்! ; பண்டியால் பண்டி செம்பொன் பரியமாகக் கொண்டு வந்து - நின் மைத்துனன் வண்டியாலே ஒரு வண்டி செம்பொன் பரிசமாகக் கொணர்ந்து ; அடிமை செய்வான் குறையுறுகின்றது அன்றி - நினக்குப் பணிபுரியக் குறையுற்று நிற்பதே அன்றி; கண்டவர் கடக்கல் ஆற்றா உருவு கிழிமிசை தீட்டி - பார்த்தவர் பார்வையை விட்டுக் கடந்துபோக இயலாத நின் வடிவத்தைக் கிழியிலே வனைந்து; நின்னை நாளும் வழிபடும் என்றாள் - உன்னை எப்போதும் வழிபடுவான் என்று கூறினாள்.
|
|
|
(வி - ம்.) பல்வளை; அன்மொழித்தொகை, விளியேற்று நின்றது. கோதை : விளி. பண்டி - வண்டி. கண்டவர் கடக்கலாற்றா உருவு - என்பதனை ”ஆடவர் கண்டால் அகறலும் உண்டோ” என்னும் மணிமேகலையோடு ஒப்புக்காண்க.
|
( 197 ) |
| 1048 |
மைத்துனன் வனப்பின் மிக்கான் |
| |
வளர்நிதிக் கிழவன் காளை |
| |
யுத்தம னுனது நாம |
| |
மல்லதொன் றுரைத்த றேற்றா |
| |
னித்திறத் திவன்க ணின்னை |
| |
யெண்ணினா ரென்ன லோடுந் |
| |
தத்தையங் கிளவி கையாற் |
| |
செவிமுத லடைச்சிச் சொன்னாள். |
|
|
(இ - ள்.) மைத்துனன் வனப்பின் மிக்கான் - மேலும் நின்மைத்துனன் அழகிற் சிறந்தவன் ; வளர்நிதிக் கிழவன் - பெருஞ் செல்வத்துக்குரியவன் ; காளை - இளைஞன்; உத்தமன் - நல்ல
|
|