கடவுள் வாழ்த்து |
6 |
|
(இ - ள்.) கற்பால் உமிழ்ந்த மணியும் - கல்லின் பகுதியீன்ற மணியும்; கழுவாது விட்டால் நற்பால் அழியும் - கழுவாமல் விட்டால் நன்மை கெடும்; (அதுபோல); நகை வெண்மதி போல் நிறைந்த - ஒளிவிடும் வெள்ளிய முழு மதிபோல் கலை நிறைந்த; சொற்பால் உமிழ்ந்த மருவும் - சொல்லின் பகுதி ஈன்ற வழுக்களும் (கழுவாது விட்டாற் சொல் நலம் கெடும். ஆதலின்); புலமை மிக்கார் - அறிவால் நிறைந்த சான்றோர்; மதியால் கழுவி - தம் அறிவினாலே களைந்து ; பொற்புஆ இழைத்துக் கொளற்பாலர் - அழகாக அமைத்துக் கொள்ளத் தக்காராயினர்.
|
|
(வி - ம்.) எனவே, யான் அத் தன்மையன் அல்லன் என்பது சொல்லெச்சம்: 'சொல்லொடுங் குறிப்பொடும் முடிவுகொள் இயற்கை, புல்லிய கிளவி எச்சமாகும்'(தொல் -செய்- 206) என்றாராதலின், மறு இல்லாத மதிக்கு மறு அடுத்தாற்போலக் கலை நிறைந்த சொற்கு அடுத்த மறுவாவது வழுவமைக்குஞ் சொல். அதனைச் சங்கத்தார் ஆராய்ந்தமை கூறவே, அவை அடக்கம் உணர்த்தியதாயிற்று. 'மதி போல் நிறைந்தமதி' யெனவும் ஆம்.
|
|
மணியும்: உம், உயர்வு சிறப்பும்மை' கழூஉவி : இன்னிசையளபெடை
|
( 1 ) |
5 |
முந்நீர்ப் பிறந்த பவளத்தொடு சங்கு முத்தும் |
| அந்நீ ருவர்க்கு மெனின்யாரவை நீக்கு கிற்பா |
|
இந்நீர வென்சொற் பழுதாயினுங் கொள்ப வன்றே |
|
பொய்ந்நீர வல்லாப் பொருளால்விண் புகுது மென்பார். |
|
(இ - ள்.) பவளத்தொடு சங்கும் முத்தும் முந்நீர்ப் பிறந்த - பவளமும் சங்கும் முத்தும் கடலிலே பிறந்தன ; அந்நீர் உவர்க்கும் எனின் - (அவை பிறந்த) அக்கடல் நீர் உவர்ப்பாக இருக்கும் என்றாலும்; அவை நீக்குகிற்பார் யார்? - அப் பொருள்களைக் கை விடுவார் எவர்? (ஒருவருமிலர்,), (அதுபோல்); பொய்ந்நீர அல்லாப் பொருளால் - மெய்யான பழம் பொருளாலே; விண் புகுதும் என்பார் - வீடு பெறுவோம் என்று நினைப்பவர்; இந்நீர என்சொல் பழுது ஆயினும் கொள்ப - உவர்க்கும், என்னுடைய இம் மொழிகள் தீய ஆயினும் (இச் சொற்களிற் பொதிந்த பொருள்களின் பயன் நோக்கி) இச் சொற்களைக் கொள்வார்கள்.
|
|
(வி - ம்.) முந்நீர்: பண்பாகு பெயராய்க் கடலை உணர்த்தியது நீர் - தன்மை. முந்நீர் : ஆக்கல், காத்தல், அழித்தல் என்னும் முத்தன்மையும் உடையது. ஆற்றுநீர் , ஊற்றுநீர், வேற்றுநீர் என்னும் மூவகை நீர்க் கலப்புடையது என்றுங் கூறுவர்.
|
|
பிறந்த : பலவின்பால் வினைமுற்று. எனினும் என உம்மை விரிக்க. கொள்ப : பலர்பால் வினைமுற்று. அன்று, ஏ : அசைகள்.
|
( 2 ) |