| குணமாலையார் இலம்பகம் |
601 |
|
| 1050 |
கந்துகப் புடையிற் பொங்குங் |
| |
கலினமா வல்லன் காளைக் |
| |
கெந்தையும் யாயு நேரா |
| |
ராய்விடி னிறத்த லொன்றோ |
| |
சிந்தனை பிறிதொன் றாகிச் |
| |
செய்தவ முயற லொன்றோ |
| |
வந்ததா னாளை யென்றாள் |
| |
வடுவெனக் கிடந்த கண்ணாள். |
|
|
(இ - ள்.) வடு எனக் கிடந்த கண்ணாள் - (மேலும்) மாவடுவைப் போன்ற கண்ணினாள்; கந்துகப் புடையில் பொங்கும் கலினமா வல்லன் காளைக்கு - பந்தின் புடைத்தல் போல விரைகின்ற புரவியைச் செலுத்த வல்லனாகிய காளைக்கு; எந்தையும் யாயும் நேரார் ஆய்விடின் - என் தந்தையும் தாயும் கொடுக்க ஒவ்வாராயின்; இறத்தல் ஒன்றோ - இறந்துபடுதலோ; சிந்தனை பிறிது ஒன்றாகிச் செய்தவம் முயறல் ஒன்றோ - வேறு நினையாமல் செய்யும் தவத்தினைக் கைக்கொள்ளுதலோ; நாளை வந்தது என்றாள் - நாளைக்கு (இவ்விரண்டில் ஒன்று) நமக்கு வந்துற்றது என்று அழுதாள்.
|
|
|
(வி - ம்.) 'ஆகி - ஆக : குரவர் நினைவு வேறாய்ப்போக' என்பர் நச்சினார்க்கினியர்.
|
|
|
கலினமா - குதிரை. வல்லனாகிய காளை என்க. காளை - சீவகன். வந்தது என்று இறந்த காலத்தாற் கூறினாள், ”வாராக் காலத்து வினைச்சொற் கிளவி, இறப்பினும் நிகழ்வினும் சிறப்பத் தேர்னறும், இயற்கையும் தெளிவும் கிளக்குங் காலை” என்பதோத்தாகலான்.
|
( 200 ) |
| 1051 |
தேனெய்போன் றினிய சொல்லாள் |
| |
சிறுமுதுக் குறைமை கேட்டே |
| |
யூனைநைந் துருகிக் கைத்தா |
| |
யுண்ணிறை யுவகை பொங்க |
| |
வானெய்பாற் கிவர்ந்த தொத்த |
| |
தழேற்கவென் பாவை யென்று |
| |
தானையாற் றடங்க ணீரைத் |
| |
துடைத்துமெய் தழுவிக் கொண்டாள். |
|
|
(இ - ள்.) கைத்தாய் - (அதனைக் கேட்ட) செவிலித்தாய்; தேன்நெய் போன்று இனிய சொல்லாள் - தேனும் நெய்யும்போல இனிய சொல்லினாளின்; சிறு முதுக்குறைமை கேட்டு - சிறு பருவத்தினும் பேரறிவுடைமை கேட்டு; ஊன் நைந்து உருகி-
|
|