பக்கம் எண் :

                   
குணமாலையார் இலம்பகம் 602 

மெய்இளகி உருகி ; உள்நிறை உவகை பொங்க - உள்ளத்திலே நிறைந்த உவகை பொங்குவதால்; என்பாவை - என் மகளே!; ஆன்நெய் பாற்கு இவர்ந்தது ஒத்தது - உன் நினைவு பசுநெய் பாலை விரும்பியது போன்றது; அழேற்க என்று - அழாதே என்றுரைத்து; தானையால் தடம்கண் நீரைத் துடைத்து - தன் முன்றானையால் குணமாலையின் கண்ணீரைத் துடைத்து; மெய் தழுவிக்கொண்டாள் - உடல் பொருந்தத் தழுவிக்கொண்டாள்.

 

   (வி - ம்.) ஊனை : ஐ: அசை 'பாற் கவர்ந்தது' என்றும் பாடம்.

 

   தேனாகிய நெய்யெனினுமாம். சிறுமுதுக்குறைமை - இளம்பருவத்திலேயே பேரறிவுடைமை. ”சிறுமுதுகுறைவிக்குச் சிறுமையுஞ் செய்தேன்” (சிலப். 16 - 68.) என்பது கோவலன் கூற்று. அழேற்க - அழாதே. தானை - முன்றானை.

( 201 )
1052 துகண்மனத் தின்றி நோற்ற
  தொல்வினைப் பயத்தி னன்றே
தகணிலாக் கேள்வி யான்கட்
  டங்கிய தென்று பின்னு
மகண்மனங் குளிர்ப்பக் கூறி
  மறுவலும் புல்லிக் கொண்டாங்
ககன்மனைத் தாய்க்குச் சொன்னா
  ளவளுந்தன் கேட்குச் சொன்னாள்.

   (இ - ள்.) மனத்துத் துகள் இன்றி நோற்ற - மனத்திலே அழுக்கில்லாமல் நோற்ற; தொல் வினைபபயத்தின் அன்றே - நல்லூழின் பயனால் அன்றே; தகண் இலாக் கேள்வியான்கண் தங்கியது என்று - தட்டற்ற நூற் கேள்வியானிடத்தே நின் உள்ளம் நின்றது என்று ; பின்னும் மகள் மனம் குளிர்ப்பச் சொல்லி - மற்றும் மகளுடைய உள்ளம் குளிரக் கூறி ; மறுவலும் புல்லிக்கொண்டு - மறுமுறையும் தழுவிக்கொண்டு ; ஆங்கு அகல்மனைத் தாய்க்குச் சொன்னாள் - அங்கே நற்றாய்க்குத் தெளியக் கூறினாள்; அவளும் தன் கேட்குச் சொன்னாள் - அவளும் தன் கணவனுக்கு உரைத்தாள்.

 

   (வி - ம்.) செவிலி நற்றாய்க்குக் கூறியதும், நற்றாய் தந்தைக்குக் கூறியதும் அறத்தொடு நிற்றல் எனப்படும். குணமாலை, ”உற்றார்க்குரியர் பொற்றொடி மகளிர்” என்ற பழமொழிப்படி என் உயிரை மீட்ட சீவகனையேயன்றி மற்றொருவரை மணம்புரியேன் என்றலே அறத்தெ்டு நிற்றல் ஆம்.

 

   துகள், ஈண்டு மனமாசு. தகண் - முட்டுப்பாடு. கேள்வி - நூற்கேள்வி. கேள்வியான் - ஈண்டுச் சீவகன். மறுவலும் -மீண்டும். மனைத்தாய் என்றது நற்றாயை, கேள் என்றது கணவனை.

( 202 )