| குணமாலையார் இலம்பகம் |
603 |
|
| 1053 |
வினையமா மாலை கேள்வன் |
| |
குபேரமித் திரற்குச் சொல்ல |
| |
வனையதே பட்ட தென்றா |
| |
லையனே நங்கைக் கொத்தான் |
| |
வனையவே பட்ட போலு |
| |
மணிமருண் முலையி னாளைப் |
| |
புனையவே பட்ட பொற்றார்ப் |
| |
புண்ணியற் கீது மென்றான். |
|
|
(இ - ள்.) வினயமாமாலை கேள்வன் குபேர மித்திரற்குச் சொல்ல - வினயமாமாலை தன் கணவனாகிய குபேரமித்திரனுக்குக் கூறியவுடன்; அனையதே பட்டது என்றால் - (அவனும்) அதுவே அவள் உள்ளத்திற் கொண்டது என்றால்; ஐயனே நங்கைக்கு ஒத்தான் - அவனே நம் பெண்ணிற்கேற்றவன்; வனையவே பட்டபோலும் மணிமருள் முலையினாளை - எழுதப்பட்டனவே போன்ற மணிமருண்ட முலையாளை; புனையவே பட்ட பொன்தார்ப் புண்ணியற்கு ஈதும் என்றான் - அணிசெயப் பெற்ற பொன்மாலை அணிந்த நல்லோனுக்குக் கொடுப்போம் என்றான்.
|
|
|
(வி - ம்.) அனையதே: ஏ : வினா என்பர் நச்சினார்க்கினியர். அனையதே - அப்படியே. வினயமாலை: என்பது, எதுகை நோக்கி வினயமாமாலை எனப் போலி ஆயிற்று; நற்றாயின் பெயர்.
|
|
|
கேள்வன் - கணவன். குபேரமித்திரன், குணமாலையின்றந்தை. அனையது என்றது, உவமை கருதாமல் சுட்டுக்பொருட்டாய் நின்றது. ஐயன் : சீவகன். நங்கை : குணமாலை: மகளிருட்சிறந்தோள் என்னும் பொருட்டு. புண்ணியம் : சீவகன். ஈதும் : தன்மைப் பன்மை.
|
( 203 ) |
வேறு
|
|
| 1054 |
கற்றார் மற்றுங் கட்டுரை |
| |
வல்லார் கவியென்னு |
| |
நற்றோ் மேலார் நால்வரை |
| |
விட்டாற் கவர்சென்றார் |
| |
சுற்றார் வல்விற் சூடுறு |
| |
செம்பொற் கழனாய்கன் |
| |
பொற்றார் மார்பீர் போதுமி |
| |
னென்றாங் கெதிர்கொண்டான். |
|
|
(இ - ள்.) கற்றார் மற்றும் கட்டுரை வல்லார் கவி என்னும் நால்வரை - படித்தவர் மேலும் புனைந்துரைப்பதிற் சிறந்தவர் கவிஞர் என்னும்முத்திறமுடையார் நால்வரை; நல்தேர் மேலார்
|
|