| குணமாலையார் இலம்பகம் |
604 |
|
|
விட்டாற்கு அவர் சென்றார் - நல்ல தேரின் மிசையராய்ச் செல்ல விட்டாற்கு இசைந்து அவர்களும் சென்றனர்; சுற்று ஆர் வல்வில் சூடுறு செம்பொன் கழல் நாய்கன் - (அப்போது) கட்டப்பட்ட வலிய வில்லையும் அணிந்த பொற்கழலையும் உடைய நாய்கன் ; பொன்தார் மார்பீர் ! போதுமின் என்று - பொன்மாலை மார்பினீர் ! வம்மின் என்றுரைத்து; ஆங்கு எதிர்கொண்டான் -வாயிலிற் சென்று எதிர்கொண்டான்.
|
|
|
(வி - ம்.) இம் மூன்று கலையும் வல்லார் நால்வர் என்க.
|
|
|
கற்றாரும் வல்லாரும் கவியும் ஆகியவர் என்னும் என வேண்டிய உம்மையும் ஆக்கச் சொல்லும் தொக்கன. கவி - கவிஞர். நால்வரைத் தேரின்மேல் ஏற்றி உய்த்தான் என்பது கருத்து. நாய்கன், ஈண்டுக் கந்துகன். விட்டாற்கு என்புழி நான்கனுருபு அதற்குடம்படுதற் பொருட்டு. போதுமின் - வம்மின்.
|
( 204 ) |
| 1055 |
சீந்தா நின்ற தீமுக வேலான் மணிச்செப்பி |
| |
னீந்தான் கொண்டா ரின்முக வாச மெரிசெம்பொன் |
| |
காந்தா நின்ற கற்பக மன்னீர் வரப்பெற்றேன் |
| |
சோ்ந்தே னின்றே வீடென நாய்கற் கவர்சொன்னார். |
|
|
(இ - ள்.) சீந்தா நின்ற தீமுக வேலான் - சீறுகின்ற அனல் கொண்ட வேலானாகிய நாய்கன்; மணிச்செப்பின் இன்முக வாசம் ஈந்தான் - மணியிழைத்த செபபிலே இனிய முகவாசம் கொடுத்தான்; கொண்டார் - அவர்களும் எடுத்துக்கொண்டனர்; எரி செம்பொன் காந்தாநின்ற கற்பகம் அன்னீர் - எரியும் பொன்னின் ஒளியை விடுகின்ற கற்பகம் போன்றீர் ; வரப்பெற்றேன் - நீவிர் வரும் பேறு பெற்றேன் ; இன்றே வீடு சேர்ந்தேன் என - (அதனால்) இன்றே பேரின்பம் பெற்றவனானேன் என்று முகமனுரைக்க; நாய்கற்கு அவர் சொன்னார் - கந்துகனுக்கு வந்த நால்வரும் கூறினர்.
|
|
|
(வி - ம்.) சீந்துதல் - சினத்தல். இனி, சிந்தாநின்ற என்றதன் விகாரமாகக் கொண்டு தீசிந்தாநின்ற முகவேலான் எனினுமாம். மணிச் செப்பின் இன்முகவாசம் ஈந்தான் என மாறுக. முகவாசம் - வெற்றிலை. காந்துதல் - ஒளிவிடுதல். கற்பகம் - தூதர்க்கு உவமை. இன்றே வீடு சேர்ந்தேன் என மாறுக. வீடு : ஆகுபெயர். வீட்டின்பம் என்றது, வீட்டின்பம் பெற்றேன்போல மகிழ்ந்தேன் என்றவாறு.
|
( 205 ) |
| 1056 |
யாமக ளீது நீர்மகட் கொண்மி னெனயாருந் |
| |
தாமக ணேரா ராயினுந் தண்ணென் வரைமார்பிற் |
| |
பூமகள் வைகும் புண்ணியப் பொற்குன் றனையானுக் |
| |
கியாமக ணோ்ந்தே மின்றென நாய்கற் கவர்சொன்னார். |
|