| குணமாலையார் இலம்பகம் |
605 |
|
|
(இ - ள்.) யாம் மகள் ஈதும் - யாம் எம் மகளைத் தருகிறோம் ; நீர் மகள் கொண்மின் - நீர் அவளைக் கொண்மின் ; என யாரும் தாம் மகள் நேரார் ஆயினும் - என எவரும் தம் மகளைக் கொடுக்க இசையார் என்றாலும் (புது முறையாக) ; தண் என் வரை மார்பில் - குளிர்ந்த மலையனைய மார்பிலே; பூமகள் வைகும் புண்ணியப் பொற்குன்று அனையானுக்கு - திருமகள் தங்கும் நலம் நிறைந்த பொன்மலை போன்ற சீவகனுக்கு ; இன்று யாம் மகள் நேர்ந்தேம் என - இன்று யாம் மகட்கொடை விரும்பினேம் என்று; நாய்கற்கு அவர் சொன்னார் - குபேரமித்திரனுக்காக வந்த நால்வரும் கந்துக்கனிடம் உரைத்தனர்.
|
|
|
(வி - ம்.) தாம்மகள் : தம்மகள் என்பதன் விகாரமும் ஆம்.
|
|
|
குபேரமித்திரனுக்கும் தமக்கும் வேற்றுமையின்றென்பது தோன்றயாம் மகள் நேர்ந்தேம் என்றார். நாய்கற்காக அத்தூதுவர் சொன்னார் என்க. குபேரமித்திரன் உரையை அவர்கொண்டு கூறினதாகக் கூறுதல் வேண்டாவுரையாகும். இதனோடு,
|
|
| |
”யாமகள் தருதும் கொள்கெனக் கூறுதல் |
|
| |
ஏமவையத் தியல்பன்று” (பெருங் - 4: 71-2) |
|
|
எனவரும் பெருங்கதையின் ஒப்புநோக்குக.
|
( 206 ) |
| 1057 |
சுற்றார் வல்விற் சூடுறு செம்பொற் கழலாற்குக் |
| |
குற்றேல் செய்துங் காளையும் யானுங் கொடியாளை |
| |
மற்சோ் தோளான் றன்மரு மானுக் கருள்செய்யப் |
| |
பெற்றே னென்னப் பேசினன் வாசங் கமழ்தாரான். |
|
|
(இ - ள்.) சுற்று ஆர் வல்வில் சூடுறு செம்பொன் கழலாற்கு - கட்டப்பட்ட வலிய வில்லும், சூடிய பொற்கழலுமுடைய குபேரமித்திரனுக்கு; காளையும் யானும் குற்றேல் செய்தும் - சீவகனும் யானும் சிறுபணி புரிவோம்; மல்சேர் தோளான் கொடியாளைத் தன் மருமானுககு அருள் செய்யப் பெற்றேன் என்ன - மல்லுக்கியன்ற தேர்ளினன் தன் பூங்காடியனைய மகளைத் தன் மருமகனுக்குக் கொடுக்கும் பேறு பெற்றேன் என்று ; வாசம் கமழ்தாரான் பேசினன் - மணங்கமழ் மாலையான் பணிவுடன் கூறினன்.
|
|
|
(வி - ம்.) குற்றேல் : குற்றேவல் என்பதன் விகாரம். அவன் தானே மகட்கொடை நேர்தலானும் கொள்வார் தாழவே வேண்டுதலானும் இங்ஙனங் கூறினான். வாசங்கமழ்தாரான் என்றது கந்துக்கடனைக் குறிப்பால் உணர்த்தியது. யானும் காலையும் குற்றேவல் செய்தும் என்பது பணிமொழி.
|
( 207 ) |