பக்கம் எண் :

                   
குணமாலையார் இலம்பகம் 606 

1058 விடைசூ ழேற்றின் வேல்புக ழான்றன் மிகுதாதை
கடல்சூழ் வையங் கைப்படுத் தான் போன் றிதுகூறக்
குடர்சூழ் கோட்ட குஞ்சரம் வென்ற வகையும்மப்
படர்சூழ் நெஞ்சிற் பாவைதன் பண்பு மவர்சொன்னார்.

   (இ - ள்.) விடைசூழ் ஏற்றின் வெல்புகழான் தன்மிகு தாதை - விடைகள் சூழ்ந்த விடைபோலும் வெல்லும் புகழுடைய சீவகனின் தந்தை; கடல்சூழ் வையம் கைப்படுத்தான் போன்று - கடல்சூழும் உலகைக் கையகப் படுத்தான் போல; இதுகூற - இப் பணிமொழியை இயம்ப; குடர்சூழ் கோட்ட குஞ்சரம் வென்ற வகையும் - குடர் சூழ்ந்த கோட்டையுடைய அசனி வேகத்தைச் சீவகன் வென்றவாறும் ; அப் படர்சூழ் நெஞ்சின் பாவைதன் பண்பும் - அந்தத் துன்பம் சூழ்ந்த உள்ளமுடைய குணமாலை கொண்ட இயல்பையும்; அவர் சொன்னார் - வந்தவர்கள் உரைத்தார்கள்

 

   (வி - ம்.) பண்பு : நேராராயின் இறந்துபடுதல், தவஞ்செய்தல் என்பவை.

 

   விடை, ஏறு என்பன காளை என்னும் பொருளன. சீவகன் தோழர்கள் சூழத் திகழ்தலாற் விடைசூழ் ஏறு என்று உவமை கூறினர். கைப்படுத்தான் போன்று மகிழ்ந்து எனப் பொதுத் தன்மை விரித்தோதுக. குஞ்சாரம் - யானை ; ஈண்டு அசனிவேகம். படர் - துன்பம்.

( 208 )
1059 மறையார் வேள்வி மந்திரச்
  செந்தீக் கொடியேபோற்
குறையாக் கற்பிற் சீவகன்
  றாயுங் கொலைவேற்கட்
பொறையொன் றாற்றாப் போதணி
  பொறையொன் றாற்றாப் போதணி
நறையார் கோதை நன்றென
  வின்புற் றெதிர்கொண்டாள்.

   (இ - ள்.) மறையார் வேள்வி மந்திரச் செந்தீக் கொடியே போல் - மறை வழிப்படும் வேள்வியிலே, மந்திரங் கூறும், செந்தீயின் கொடியைப் போன்ற; குறையாக் கற்பின் சீவகன் தாயும் - குறையாத கற்பினையுடைய சுநந்தையும்; கொலை வேல்கண் பொறை ஒன்று ஆற்றாப் போது அணி பொன் கொம்பு அனையாளை - கொலை வேலனைய கண்களையும், இல்லறப் பொறை ஒன்றுமே நடத்திப் போதணிந்த பொற்கொம்பு போன்ற குணமாலையை; நறையார் கோதை நன்று என - தேன் பொருந்திய