பக்கம் எண் :

                         
குணமாலையார் இலம்பகம் 607 

கோதை போன்றவளை மணப்பது நன்று என்று ; இன்பு உற்று எதிர்கொண்டாள் - இன்பமுற்று விரும்பிக் கொண்டாள்.

 

   (வி - ம்.) பொற்கொம்பனையாள் வினயமாமாலை என்றும் நறையார்கோதை குணமாலை என்றும் நச்சினார்க்கினியர் கொள்வர். போதணி பொற்கொம்பு : இல்பொருளுவமை. கொடி - ஒழுங்கு. ஆற்றா - ஆற்றி : செய்யா என்னும் வாய்ப்பாட்டு இறந்தகால வினையெச்சம்.

( 209 )
1060 பொற்கச் சார்த்த பூணணி பொம்மன் முலையாளை
யற்கச் செய்த யாப்பின ராகி யவண்வந்தார்
பொற்பக் கூறிப் போகுது மென்றார்க் கெழுகென்றார்
வற்கம் மிட்ட வண்பரி மாவி னவர்சென்றார்.

   (இ - ள்.) அவண் வந்தார் - அங்கு வந்த நால்வரும்; பொன் கச்சு ஆர்ந்த பூண் அணி பொம்மல் முலையாளை - பொற்கச்சினாற் கட்டப்பெற்ற, அணிகலன் அணிந்த பெரிய முலையினாளை; அல்கச் செய்த யாப்பினராகி - அடையச் செய்த உறுதியுடையவராய்; பொற்பக் கூறி - (மணஞ் செய்யும் பொழுதையும்) அழகுறக் கூறி ; போகுதும் என்றார்க்கு - போவோம் என்று கூறினவர்க்கு; எழுக என்றார் - அங்ஙனமே செல்க என்றார் ; அவர் வற்கம் இட்ட வண்பரி மாவின் சென்றார் - வந்தவர்களும் பண்முற்றப் பெற்ற சிறந்த புரவி மீதிலே சென்றனர்.

 

   (வி - ம்.) திருமணம் தப்பாமல் முடித்தற்குக் கடிதிற் சென்றார்.

 

   அல்க - அற்க என எதுகைநோக்கி வலித்தது. அல்குதல் - தங்குதல். யாப்பினர் - யாப்பு - தொடர்புமாம். பொற்ப - பொலிவுற. வற்கம் - குதிரையணிகலனில் ஒன்று. வண்பரிமா - வளவிய செலவினையுடைய குதிரை.

( 210 )

வேறு

 
1061 மடந்தை திறத்தி னியையம்மகட் கூறி வந்தார்
விடந்தைத்த வேலாற் குரைத்தார்க்கவன் மெய்ம்மகிழ்ந்தா
னுடங்குங் கொடிப்போல் பவணூபுர மார்ப்ப வந்து
தடங்கண் ணவடா யதுகேட்டலுந் தக்க தென்றாள்

   (இ - ள்.) மடந்தை திறத்தின் இயைய மகள் பேசி வந்தார் - குணமாலையின் திறத்தாலே அவர்கள் இசைய மகளைக் கொடுப்பதாகப் பேசி வந்தவர்கள்; விடம்தைத்த வேலாற்கு உரைத்தார்க்கு - நஞ்சுபதிந்த வேலையுடைய குபேரமித்திரனுக்குக் கூறினார்க்கு; அவன் மெய்மகிழ்ந்தான் - அவனும் உண்மையான மகிழ்ச்சியடைந்தான்; நுடங்கும் கொடிபோல் பவள் நூபுரம் ஆர்ப்ப வந்து அது - அசையும் கொடிபோன்ற சுநந்தை நூபுரம் ஒலிக்க வந்து (கூறிய) அம் மொழியை ; தடம்