பக்கம் எண் :

                     
குணமாலையார் இலம்பகம் 608 

கண்ணவள் தாய் கேட்டலும் தக்கது என்றாள் - பெருங்கண்ணினளின் அன்னையான வினயமாமாலை கேட்டவுடன் அவளுக்கு அது தக்கது என்றாள்.

 

   (வி - ம்.) மடந்தை : குணமாலை. வேலான் : குபேரமித்திரன். கொடி போல்பவள்: சுநந்தை. நூபுரம் - ஓர் அடியணிகலன். தாய் : வினயமாமாலை. அது தக்கதென்றாள் என இயைக்க.

( 211 )
1062 திருவிற் கமைந்தான் றிசைபத்து மறிந்த தொல்சீ
ருருவிற் கமைந்தாற் கமைந்தாளென யாரு மொட்டப்
பெருகுங் கணியிற் கணிபேசிய பேதி னாளாற்
பருகற் கமைந்த வமிர்தின்படர் தீர்க்க லுற்றார்.

   (இ - ள்.) திருவிற்கு அமைந்தான் - திருவனையாளாகிய குணமாலைக்குச் சீவகன் அமைந்தான் ; திசைபத்தும் மலிந்த தொல்சீர் உருவிற்கு அமைந்தாற்கு அமைந்தாள் - பத்துத் திசையினும் நிறைந்த பழம் புகழையுடைய, அழகுக்கெனவே அமைந்த சீவகனுக்குக் குணமாலையும் அமைந்தாள்; என யாரும் ஒட்ட - என்று எல்லோரும் இசையுமாறு; பெருகும் கணியின் கணிபேசிய பேதுஇல் நாளால் - வளருங் கணித நூலை அறிந்த கணி கூறிய மயக்கம் அற்ற நாளிலே; பருகற்கு அமைந்த அமிர்தின் படர் தீர்க்கல் உற்றார் - உண்பதற்குத் தக்க அமிர்தமாகிய குணமாலையின் வருத்தத்தை நீக்கலுற்றனர்.

 

   (வி - ம்.) திரு : உவமவாகுபெயர். திருவிற்குச் சீவகன் அமைந்தான் என வருவித்துக் கூறுக. ஒட்ட - உடன்பட. கணியிற்கணி என்புழி முன்னின்ற கணி ஆகுபெயர்; நூல். ஏனையது - கணிவன். பேது இல்நாள் - மயக்கமில்லாத நல்லநாள்; குற்றமில்லாத நாளுமாம். படர்தீர்க்க லுற்றார் என்பது திருமண விழா நடத்துதற்கு முற்பட்டார் என்றவாறு.

( 212 )
1063 கரைகொன் றிரங்குங் கடலிற்கலி கொண்டு கல்லென்
முரசங் கறங்க முழவிம்மவெண் சங்க மார்ப்பப்
பிரசங் கலங்கிற் றெனமாந்தர் பிணங்க வேட்டான்
விரைசென் றடைந்த குழலாளையவ் வேனி லானே.

   (இ - ள்.) கரை கொன்று இரங்கும் கடலின் கலிகொண்டு - கரையோடு மோதி ஆரவாரிக்கும் கடலைப்போல முழக்கங்கொண்டு ; கல் என் முரசம் கறங்க - கல்லென்று முரசு முழங்க; முழவு விம்ம - முழவு ஒலிக்க ; வெண் சங்கம் ஆர்ப்ப - வெண்மையான சங்குகள் ஒலிக்க ; பிரசம் கலங்கிற்று என மாந்தர் பிணங்க - வண்டுகளின் திரள் மயங்கியது என மக்கள் நெருங்க ; அவ் வேனிலான் - சிவனுடைய நெற்றிக் கண்ணுக்கு அழி