பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 61 

துற்று பெரும்பாம்பும் - களிற்றுப் பொறியும் விழுங்கும் பெரிய பாம்புப் பொறியும்; கூற்றம் அன கழுகு தொடர் குந்தமொடு கோண்மா - காலனைப்போன்ற கழுகும் கட்டியிழுக்கும் சங்கிலியும் விட்டேறு என்னும் படையும் கொல்லும் புலி முதலிய விலங்குகளும் ஆகிய பொறிகளும்;

 

   (வி - ம்.) பற்றின் என்பதைத் 'தெவ்வர் தலைபனிப்பத் திருந்தும்' என (104- ஆம் செய்யுளில் உள்ள தொடருடன்) முடிக்க.

 

   இதுமுதல் நான்கு பாட்டுகள் குளகம்.

 

   நூற்றுவரைக் கொல்லி - சதக்கினி; நூறுபேரை ஒருகாற் கொல்வதொரு பொறி. நூக்குதல் - தள்ளுதல. எறிதல் - அடித்தல். பேய் - ஒரு பொறி. துற்றுதல் - விழுங்குதல். கோண்மா - கொலை செய்யும் விலங்குகள்.

( 72 )
102 விற்பொறிகள் வெய்யவிடு குதிரைதொட ரயில்வாள்
கற்பொறிகள் பாவையனம் மாடமடு செந்தீக்
கொற்புனைசெய் கொள்ளிபெருங் கொக்கெழில்செய்கூகை
நற்றலைக டிருக்கும்வலி நெருக்குமர நிலையே.

   (இ - ள்.) விற்பொறிகள் - விற்பொறிகளும்; வெய்யவிடு குதிரை - கொடிய, பகைவர்மேலே விடுங் குதிரைப் பொறிகளும்; தொடர் அயில்வாள் - தானே தொடர்ந்து செல்லுங் கூரிய வாட்பொறிகளும்; கற்பொறிகள் - வந்தவர்மேல் தாமே கற்களை வீசும் இடங்கணி முதலிய பொறிகளும்; பாவை அனம் மாடம் அடு செந்தீ - பாவையும் அன்னமும் ஆகிய பொறிகளும் நாடகசாலைகளும் அடப்படும் அன்னமும் ஆகிய பொறிகளும் நாடகசாலைகளும் அடப்படும் செந்தீயும்; கொல் புனை செய் கொள்ளி - கொல்லராற் புனையப்பட்ட இரும்புக் கொள்ளியும்; பெருங்கொக்கு- பெரிய கொக்குப் பொறிகளும்; எழில்செய் கூகை - அழகிய கூகைப் பொறிகளும்; நல்தலைகள் திருக்கும் வலி நெருக்கும் மரநிலை - அழகிய தலைகளைத் திருகிக்கொள்ளும் வலியுடனே நெருக்கும் மரமான ஐயவித் துலாமும்;

 

   (வி - ம்.) எழில்செய் கூகை : இகழ்ச்சிக் குறிப்பு.

 

   விற்பொறி - தானே அம்பெய்யும் இயந்திர வில் . குதிரை - ஒரு பொறி. கற்பொறி - கல்லை வீசும் பொறி. இதனை இடங்கணி என்றும் கூறுப. பாவை முதலியனவும் பொறிகள். மாடம் - நாடகசாலை போன்று தோன்றித் தன்பாற் புக்காரைக் கொல்லுமொரு பொறி. நெருக்கு மரம் - ஐயவித்துலாம்.

( 73 )
103 செம்புருகு வெங்களிக ளுமிழ்வதிரிந் தெங்கும்
வெம்புருகு வட்டுமிழ்வ வெந்நெய்முகந் துமிழ்வ
வம்புமிழ்வ வேலுமிழ்வ கல்லுமிழ்வ வாகித்
தம்புலங்க ளால்யவனர் தாட்படுத்த பொறியே.