| குணமாலையார் இலம்பகம் |
610 |
|
|
கண்ணுக்கு நிறைந்த ஒளி பொருந்திய மென்முலையையும் ; காம்பு அடும் மென்தோள் - மூங்கிலை வெல்லும் மெல்லிய தோளையும் உடைய ; பெண்ஆர் அமிர்து - பெண்மை நிறைந்த அமிர்தமாகும்.
|
|
|
(வி - ம்.) கிளவி - மொழி. புரை : உவமவுருபு. கண்ணார் - கண்ணுக்கு நிறைந்த என்க. காம்பு - மூங்கில். அவன் : சீவகன்.
|
( 215 ) |
| 1066 |
தேதா வெனவண் டொடுதேன் வரிசெய்யப் |
| |
போதார் குழலாள் புணர்மென் முலைபாயத் |
| |
தாதார் கமழ்தார் மதுவிண் டுதுளிப்ப |
| |
வீதா மவரெய் தியவின் பமதே. |
|
|
(இ - ள்.) தேதா என வண்டொடு தேன்வரி செய்ய - தேதா என்று வண்டும் தேனும் பாட்டிசைப்ப; போது ஆர் குழலாள் புணர் மென்முலை பாய - மலர்க் கூந்தலாளின் இரு மென்முலைகளும் பாய்தலினால்; தாது ஆர் கமழ்தார் மதுவிண்டு துளிப்ப - தாது நிறைந்த மணங்கமழ் (சீவகனுடைய) மாலையில் தேன் விண்டு துளிக்க; ஈது அவர் எய்திய இன்பமது ஆம் - இவர்கள் அடைந்த இன்பம் வானவர் பெற்ற இன்பம் ஆகும்.
|
|
|
(வி - ம்.) தேதா - ஆளத்தி யென்னும் இசை. அவர் - தேவர்.
|
|
|
தேதா : ஒலிக்குறிப்பு. தேன் - வண்டு. வரி - பாட்டு. அவர் என்பதற்கு, குணமாலையும் சீவகனும் ஆகிய அவ்விருவரும் எனினுமாம்.
|
( 216 ) |
| 1067 |
முந்நீர்ப் பவளத் துறைநித் திலமுத்த |
| |
மந்நீ ரமிர்தீன் றுகொடுப் பவமர்ந்தான் |
| |
மைந்நீர் நெடுங்கண் புருவங் கண்மலங்கப் |
| |
பொன்னா ரரிக்கிண் கிணிபூ சலிடவே. |
|
|
(இ - ள்.) முந்நீர்ப் பவளத்து உறை நித்தில் முத்தம் - கடலிற் பிறந்த பவளத்தில் இருக்கின்ற முத்துப் போன்ற பற்கள்; அந்நீர் அமிர்து ஈன்று கொடுப்ப - அக் கடலிற் பிறந்த அமிர்தத்தைத் தான் பெற்றுத்தர; மைநீர் நெடுங்கண் புருவங்கள் மலங்க - மையின் தன்மை கொண்ட நீண்ட கண்களும் புருவங்களும் பிறழ; பொன் ஆர் அரி கிண்கிணி பூசல் இட - பொன்னால் ஆன பரலுடைய கிண்கிணிகள் ஒலிக்க; அமர்ந்தான் - புணர்ச்சியைப பொருந்தினான்.
|
|
|
(வி - ம்.) 'அயின்றான்' என்னும் பாடத்திற்குப் பானமும் புணர்ச்சியும் உடனிகழ்ச்சியாம்.
|
|
|
முந்நீர் - கடல். நித்திலமுத்தம் என்புழி முத்தம் என்பது உவமை குறியாது வாளா எயிறு என்னும் பெயர் மாத்திரையாய் நின்றது.
|
|