| குணமாலையார் இலம்பகம் |
611 |
|
|
நித்திலம்போன்ற எயிறு என்க. அந்நீர் என்னும் சுட்டு முந்நீரைச் சுட்டியது. அமிர்து - அமிர்தம்போன்ற ஊறலை. அமர்ந்தான் என்றது இடக்கரடக்கு. அரி - பரல்.
|
( 217 ) |
| 1068 |
கம்பார் களியா னைகலக் கமலங்கி |
| |
யம்பே ரரிவா ணெடுங்கண் புதைத்தஞ்சிக் |
| |
கொம்பே குழைவா யெனக்கே குழைந்திட்டாய் |
| |
வம்பே யிதுவை யகத்தார் வழக்கன்றே. |
|
|
(இ - ள்.) கொம்பே! - கொம்பு போன்றவளே!; கம்பார் களியானை கலக்க மலங்கி - தூணிற் பொருந்தும் மதயானை கலக்கியதனாற் கலங்கி ; அம்புஏர் அரிவாள் நெடுங்கண் புதைத்து அஞ்சி - அம்பனைய அழகிய செவ்வரி படர்ந்த ஒளிமிகுங் கண்களை மூடிக்கொண்டு நடுங்கி ; குழைவாய் எனக்கே குழைந்திட்டாய் - வருந்துகின்ற நீ (பொது நோக்கினால் இவன் இறந்துபடுவான் என்று அருள் நோக்கினை அளித்தாய் ஆதலால்) எனக்கே வருந்தினை ; இது வையகத்தார் வழக்கு அன்று, வம்பு - இங்ஙனஞ் செய்தல் உலகத்தார் வழக்கன்று ; புதியதொரு வழக்கமாகும்.
|
|
|
(வி - ம்.) இவ்வாறு கூறுதல் நயப்பு. தாம் வளைவார் பிறர்க்கு ஊற்றங்கோல் ஆகார் என்பது உலகு வழக்கு. நீல நெடுங்கணால் கவர்ந்த கள்வி' (சீவக. 1024) என்பது பொதுநோக்கு.
|
( 218 ) |
| 1069 |
பூவார் புனலாட் டினுட்பூ நறுஞ்சுண்ணம் |
| |
பாவாய் பணைத்தோட் சுரமஞ் சரிதோற்றாள் |
| |
காவா தவள்கண் ணறச்சொல் லியவெஞ்சொ |
| |
லேவோ வமிர்தோ வெனக்கின் றிதுசொல்லாய். |
|
|
(இ - ள்.) பாவாய் - பாவையே!; பூஆர் புனல் ஆட்டினுள் - மலரையுடைய நீர் விளையாட்டில்; பணைத்தோள் சுரமஞ்சரி - பெருந்தோளையுடைய சுரமஞ்சரி; பூநறுஞ் சுண்ணம் தோற்றாள் - அழகிய நல்ல சுண்ணத்திலே தோல்வியடைந்து ; காவாது அவள் கணஅறச் செர்ல்லிய வெஞ்சொல் - வாய் காவாமல் அவள் கண்ணோட்டமின்றிக் கூறிய கொடுஞ்சொல்; இன்று எனக்கு ஏவோ அமிர்தோ சொல்லாய் - இன்று எனக்குத் துன்பமாயிற்றோ? இன்பமாயிற்றோ ? கூறுவாய்.
|
|
|
(வி - ம்.) காவாத சொல், 'கூறு இவையோ?' (சீவக. 876) என்று சுரமஞ்சரி கூறியது. அதனால், அவள், சுண்ணம் தோற்றனம் தீம்புனல் ஆடலம் (சீவக. 878) என்று கூறவே, வென்றவர் புனலாட வேண்டுதலின், இவள் புனலாட்டயர்ந்து வருகின்ற நேரத்துத் தான் களிற்றிடையுதவி எதிர்ப்பட்டதனால் இவ்வின்பம் பெறுதலின.் தான், 'கண்ணின் கண்டிவை நல்ல' (1884) என்றும், 'சால நல்லன
|
|