| குணமாலையார் இலம்பகம் |
613 |
|
| 1072 |
மின்னே ரிடையா ளடிவீழ்ந் துமிரந்துஞ் |
| |
சொன்னீ ரவளற் பழலுட் சொரிந்தாற்ற |
| |
விந்நீ ரனகண் புடைவிட் டகன்றின்ப |
| |
மன்னார்ந் துமதர்ப் பொடுநோக் கினண்மாதோ. |
|
|
(இ - ள்.) மின்நேர் இடையாள் அடிவீழ்ந்தும் இரந்தும் - (அவள் புலத்தல் கண்ட சீவகன்) மின் னொக்கும் சிற்றிடையாளின் அடியிலே வீழ்ந்தும் வேண்டியும்; சொல்நீர் அவள் அனபு அழலுள் சொரிந்து ஆற்ற - சொல்லாகிய நீரை அவளுடைய அன்பாகிய தீயிலே பெய்து அவித்தானாக; இந்நீரன கண்புடை விட்டு அகன்று - இத் தன்மையவற்றைக் கண்களிலிருந்து நீக்கிவிட்டு; இன்பம் மன்ஆர்ந்து மதர்ப்பொடு கண்புடை நோக்கினள் - இன்பம் மனத்தே மிக நிறைதலின் களிப்பொடு கடைக்கணித்துப் பார்த்தாள்.
|
|
|
(வி - ம்.) மாது, ஓ: அசைகள். கண்புடை என்பதைப் பின்னருங் கூட்டுக; கண்களே நோய் நோக்கும் மருந்துமாய் நிற்றலின். இந்நீரன விட்டு. . . . .மதர்ப்பொடு கண்புடை நோக்கினள்' என்று கூட்டுவர் நச்சினார்க்கினியர்.
|
|
|
அன்பு காரணமாகப் பிறத்தலானும் கணவனுக்குத் துன்பமாயிருத்தலானும் ஊடலை அன்பழல் என்றார். அதனை அவித்தலாற் 'பணி மொழியை நீர்' என்றார்.
|
( 222 ) |
| 1073 |
இன்னீ ரெரிமா மணிப்பூண் கிடந்தீன்ற |
| |
மின்னா ரிளமென் முலைவேய் மருண்மென்றோட் |
| |
பொன்னார் கொடியே புகழிற் புகழ்ஞால |
| |
நின்வா ணெடுங்கண் விலையா குநிகர்த்தே. |
|
|
(இ - ள்.) இன்நீர் எரிமா மணிப்பூண் கிடந்து ஈன்ற - இனிய பண்புடைய, ஒளிவிடும் மணிக்கலன் கிடந்து உண்டாக்கின; மின் ஆர் இளமென்முலை - ஒளியார்ந்த இளமையான மென்முலையையும்; வேய்மருள் மென்தோள் - மூங்கிலை மயக்கும் மென்மையான தோளினையும் உடைய ; பொன்ஆர் கொடியே !- பொற்கொடியே!; புகழின் - யான் புகழ நினைத்தால் ; புகழ் ஞாலம் நின்வாள் நெடுங்கண் நிகர்த்தே விலை ஆகும்? - புகழ் பெற்ற உலகம் உன்னுடைய வாட்கண்களுக்கு ஒப்பாகுமோ? ஆகாது. ஆதலால் புகழ்தலும அரிது.
|
|
|
(வி - ம்.) நிகர்த்தே : ஏ : எதிர்மறை.
|
|
|
இன் நீர் எரி மாமணி - காட்சிக்கினிய நீர்மையையுடைய ஒளி சிறந்த மணி என்க. மின் - ஒளி. வேய் - மூங்கில். நிகர்த்தே என்பதிலுள்ள ஏகாரத்தை ஆகுமே எனக் கூட்டி ஆகாது என எதிர்மறைப் பொருள் கொள்க.
|
( 223 ) |