பக்கம் எண் :

 
                 
குணமாலையார் இலம்பகம் 615 

வேறு

 
1076 அரும்பெறற் குருசிற் கஞ்ஞான்
  றோடிய நாக நாணிக்
கரும்பெறி கடிகை யோடு
  நெய்ம்மலி கவளங் கொள்ளா
திரும்புசெய் குழவித் திங்கண்
  மருப்பிடைத் தடக்கை நாற்றிச்
சுரும்பொடு வண்டு பாடச்
  சுளிவொடு நின்ற தன்றே.

   (இ - ள்.) அஞ்ஞான்று அரும்பெறல் குருசிற்கு ஓடிய நாகம் - நீர் விளையாட்டின்போது, பெறுதற்கரிய சீவகனுக்குத் தோற்ற யானை ; நாணி - வெட்கமுற்று; கரும்பு எறி கடிகையோடு நெய்ம்மலி கவளம் கொள்ளாது - கருப்பந் துண்டங்களையும் நெய் நிறைந்த கவளத்தினையும் கொள்ளாமல்; இரும்புசெய் குழவித் திங்கள் - கிம்புரியிட்ட பிறைத்திங்கள் போன்ற ; மருப்பிடைத் தடக்கை நாற்றி - கொம்பிலே துதிக்கையை வளைத்துத் தொங்கவிட்டு ; சுரும்பொடு வண்டு பாட - மதம் மிகுதலின் உண்ண முடியாமல் சுரும்பும் வண்டு்ம் பாட ; சுளிவொடு நின்றது - சினத்தொடு நின்றது.

 

   (வி - ம்.) குருசில் - ஈண்டுச் சீவகன். அஞ்ஞான்று என்பது பண்டறிசுட்டு. நாகம் - யானை ; அசனிவேகம். கடிகை - துண்டம். குழவித்திங்கள் பிறை ; இது மருப்பிற்குவமை. சுளிவு - சினம்

( 226 )
1077 பகைபுறங் கொடுத்த வேந்திற்
  பரிவொடு பகடு நிற்பத்
தகைநிறக் குழைக டாழ்ந்து
  சாந்தின்வாய் நக்கி மின்னப்
புகைநிறத் துகிலிற் பொன்னாண்
  டுயல்வரப் போந்து வேந்தன்
மிகைநிறக் களிற்றை நோக்கி
  வேழமென் னுற்ற தென்றான்.

   (இ - ள்.) பகைபுறம் கொடுத்த வேந்தின் - பகைவனுக்கு முதுகு கொடுத்த வேந்தனைப்போல; பகடு பரிவொடு நிற்ப - யானை வருத்தத்துடன் நிற்றலின்; தகைநிறக் குழைகள் தாழ்ந்து சாந்தின்வாய் நக்கி மின்ன - நன்னிறக் குழைகள் தாழ்ந்து தோளில் அணிந்த சந்தனத்தைத் தடவி ஒளிவிட ; புகைநிறத் துகிலில் பொன்நாண் துயல்வர வேந்தன் போந்து -