| குணமாலையார் இலம்பகம் | 
616  | 
 
  | 
 
| 
 புகையனைய நிறமுடைய ஆடையிற் பொன் அரைநாண் அசைய அரசன் வந்து; மிகைநிறக் களிற்றை நோக்கி - உயர் நிறமுடைய யானையைப் பார்த்து; வேழம் என் உற்றது என்றான் - யானை அடைந்த வருத்தம் என்னென்று பாகனை வினவினான். 
 | 
  | 
 
| 
    (வி - ம்.) நச்சினார்க்கினியர் 'தாழ்ந்து என்பதனைக், 'களிற்றைத் தாழ்ந்து நோக்கி' எனப் பின்னே கூட்டுவர். அவ்வாறு கூட்டுதலிற் போதப் பயனுண் டெனிற் கொள்க. வேந்தன் களிறுற்ற வருத்த நிலையைக் கேட்டு வந்து நோக்கினான் என்று கொள்க. 
 | 
( 227 ) | 
 
 
|  1078 | 
கொற்றவன் குறிப்பு நோக்கிக் |  
|   | 
  குஞ்சரப் பாகன் கூறு |  
|   | 
மிற்றென வுரைத்த றேற்றே |  
|   | 
  னிறைவநின் னருளி னாங்கொல் |  
|   | 
செற்றமிக் குடைமை யாற்கொல் |  
|   | 
  சீவக னின்ன நாளான் |  
|   | 
மற்றிதற் குடற்சி செய்ய |  
|   | 
  மதுமிது செறித்த தென்றான். | 
 
 
 | 
 
| 
    (இ - ள்.) கொற்றவன் குறிப்பு நோக்கி - அரசன் மனக் கருத்தை உணர்ந்து; குஞ்சரப் பாகன் கூறும் - யானைப் பாகன் சொல்வான் ; இறைவ! - அரசே!; நின் அருளின் ஆம்கொல் - நின் உடன்பாட்டினாலோ; செற்றம் மிக்கு உடைமையால் கொல் - இதனிடத்துச் சீவகன் கொண்ட சீற்றமிகுதியாலோ ; சீவகன் இன்ன நாளால் - சீவகன் நீர்விளையாட்டன்று; இதற்கு உடற்சி செய்ய - இதற்குச் சினம் மிக உண்டாக்க ; இது மதம் செறித்தது - இது மதத்தை அடக்கியது ; இற்று என உணர்தல் தேற்றேன் - இதனைத் தவிர யான் வேறு இத்தன்மையது என விளங்கத் தெளிகிலேன் ; என்றான் - என்றுரைத்தான். 
 | 
  | 
 
| 
    (வி - ம்.) குறிப்பு நோக்கி யென்றார், சீவகனைக் குறை கூறலாகாதெனக் கருதினும், அரசன் சினமுணர்ந்து அரசன் நினைவு மகிழக் கூறுதலின். மற்று ; வினைமாற்று. 
 | 
( 228 ) | 
 
 
|  1079 | 
ஈண்டழற் குட்டம் போல |  
|   | 
  வெரியெழத் திருகி நோககிக் |  
|   | 
கோண்டரு குறும்பர் வெம்போர் |  
|   | 
  கோக்குழர்ம் வென்ற துள்ளி |  
|   | 
மாண்டதில் செய்கை சூழ்ந்த |  
|   | 
  வாணிகன் மகனை வல்லே |  
|   | 
யாண்டிறங் களைவெ னோடிப் |  
|   | 
  பற்றுபு தம்மி னென்றான். | 
 
 
 |