| குணமாலையார் இலம்பகம் |
618 |
|
| 1081 |
சண்பக மாலை வேய்ந்து |
| |
சந்தனம் பளிதந் தீற்றி |
| |
விண்புக நாறு சாந்தின் |
| |
விழுமுலைக் காம வல்லி |
| |
கொண்டெழுந் துருவு காட்டி |
| |
முகத்திடைக் குளித்துத் தோண்மேல் |
| |
வண்டளி ரீன்று சுட்டி |
| |
வாணுதல் பூப்ப வைத்தான். |
|
|
(இ - ள்.) சண்பக மாலை வேய்ந்து - சண்பக மாலையைச் சூட்டி ; சந்தனம் பளிதம் தீற்றி விண்புக நாறு சாந்தின் - சந்தனத்தையும் பச்சைக் கருப்பூரத்தையும் கலந்து வானளாவ மணக்கும் சந்தனக் குழம்பினாலே; காமவல்லி விழுமுலைக் கொண்டு எழுந்து - காமவல்லியானது சிறந்த முலையை அடியாகத் தொடங்கி எழுந்து; உருவு காட்டி - தனது உருவத்தைக் காட்டி; தோண்மேல் வண்தளிர் ஈன்று - தோளின்மேல் வளவிய தளிரை நல்கி ; முகத்திடைக் குளித்து - முகத்திலே மறைந்து போய் ; வாள்நுதல் சுட்டி பூ வைத்தான் - ஒள்ளிய நெற்றீயிலே சுட்டியாக மலருமாறு எழுதினான்.
|
|
|
(வி - ம்.) பளிதம் - பச்சைக் கருப்பூரம். தீற்றுதல் - பூசுதல். விழுமுலை - சிறந்த முலை. காமவல்லி - கற்பக மரத்திற் படருமொரு பொன்னிறப் பூங்கொடி. அக்கொடியின் உருவத்தைச் சீவகன் குணமாலை முலைமேல் எழுதினன் என்க.
|
( 231 ) |
| 1082 |
பண்ணடி வீழுந் தீஞ்சொற் |
| |
பாவைநின் வனப்பிற் கெல்லாங் |
| |
கண்ணடி கருங்க ணென்னு |
| |
மம்பறாத் தூணி தன்னாற் |
| |
புண்ணுடை மாம்பத் தோவா |
| |
தெய்தியா லெங்குப் பெற்றாய் |
| |
பெண்ணுடைப் பேதை யென்றோர் |
| |
நாண்முற்றும் பிதற்றி னானே. |
|
|
(இ - ள்.) பண்அடி வீழும் தீசொல் பாவை - பண் தோற்று அடியிலே வணங்கும் இனிய மொழிகளையுடைய பாவையே !; வனப்பிற்கு எல்லாம் கண்ணடி - அழகிற்கெல்லாம் கண்ணாடி போன்றவளே!; நின் கருங்கண் என்னும் அம்பறாத்தூணி தன்னால் - நின் கரிய கண்களாகிய அம்பறாத்தூணியில் நோக்கமாகிய அம்பினால் ; புண்உடை மார்பத்து ஓவாது எய்தி - (பழைய)
|
|