பக்கம் எண் :

                   
குணமாலையார் இலம்பகம் 619 

புண்ணுடைய மார்பிலே ஓயாமல் எய்கின்றனை; எங்குப் பெற்றாய் - இத்தகைய அம்பறாத்தூணியை எங்குப் பெற்றனை ; பெண் உடைப் பேதை ! - பெண்மையுடைய பேதையே !; என்று ஓர் நாள் முற்றும் பிதற்றினான் - என்று ஒருநாளெல்லாம் பிதற்றிக்கொண்டிருந்தான்.

 

   (வி - ம்.) 'கண்ணாடி' என்பது 'கண்ணடி' என விகாரப்பட்டது. எல்லார்க்கும் அழகு இத்தன்மைத்தென்று உணர்த்துதலின் கண்ணாடி உவமை ஆயிற்று. மார்பத்துழை என அத்திற்குப் பின் ஓர் ஏழனுருபு விரிக்கவே அஃது இடப்பொருளுணர்த்தி, அவற்குச் சேர்ந்த நெஞ்சினை உணர்த்தும்; 'அரசனுழை யிருந்தான்' போல. பிதற்றினானென்றது மயக்கத்தால்.

( 232 )
1083 திங்கள்சோ் முடியி னானுஞ்
  செல்வியும் போன்று செம்பொ
னிங்குவார் கழலி னானுங்
  கோதையு மிருந்த போழ்திற்
சிங்கவே றெள்ளிச் சூழ்ந்த
  சிறுநரிக் குழாத்திற் சூழ்ந்தா
ரங்கது கண்ட தாதி
  யையனுக் கின்ன தென்றாள்.

   (இ - ள்.) திங்கள்சேர் முடியினானும் செல்வியும் போன்று - பிறை முடியணிந்த பெருமானும் உமையம்மையும் போல; செம்போன் இங்கு வார்கழலினானும் கோதையும் - செம்பொன் தங்கிய வாரில் தங்கிய கழலினானும் குணமாலையும்; இருந்த போழ்தில் - அமர்ந்திருந்த காலத்தில்; சிங்க ஏறு எள்ளிச் சூழ்ந்த - சிங்க ஏற்றினை இகழ்ந்து அதன் குகையிலே சூழ்ந்த; சிறுநரிக் குழாத்தின் சூழ்ந்தார் - குள்ளநரிக் கூட்டம்போல மனையை வந்த வீரர்கள் சூழ்ந்தனர் ; அங்கு அது கண்ட தாதி - அங்கே அதனைக் கண்ட சேடி ; ஐயனுக்கு இன்னது என்றாள் - சீவகனுக்கு இங்ஙனம் சூழ்ந்தார் என்றனள்.

 

   (வி - ம்.) திங்கள் சேர்முடியினான் : சிவபெருமான். செல்வி : இறைவி. அன்பினால் இரண்டறக் கலந்திருந்ததற்குச் சிவபெருமானும் இறைவியும் உவமை என்க. சிங்கவேறு - ஆண் சிங்கம்; இது சீவகற் குவமை. சிறு நரிக்குழாம் - கட்டியங்காரன் ஏவிய படைஞர் குழாத்திற்குவமை. தாதி - பணிமகள்.

( 233 )
1084 என்றவ ளுரைப்பக் கேட்டே
  யிடிபட முழங்கிச் செந்தீ
நின்றெரி வதனை யொத்து
  நிண்முழைச் சிங்க வேறு