|
(இ - ள்.) வேந்தொடு மாறுகோடல் விளிகுற்றார் தொழிலது ஆகும் - அரசனொடு மாறுபடுதல் கெடுதலடைந்தார் தொழிலாகும், (ஆகையால்) ; காய்ந்திடு வெகுளி இவனை நீக்கிக் கைகட்டி உய்த்தால் - காயும் வெகுளியை இவனிடமிருந்து நீக்கிக் கையைப் போர்த்தொழில் செய்யாதவாறு கட்டி இவர்களுடன் போகவிட்டால்; ஆய்ந்து அடும் அழற்சி நீங்கும் - இவன் செய்தவற்றை ஆராய்ந்து, இவனை வருத்தும் வெகுளியை அரசன் நீங்குவான் ; அது பொருள் என்று - அதுவே செய்யத் தக்கது என்று ; நல்ல சாந்து உடை மார்பன் தாதை - நல்ல சந்தனம் அணிந்த மார்பனுக்குத் தந்தை; தன் மனத்து இழைக்கின்றான் - (சீவகன் போர்க்கோலத்தையும் நந்தட்டன் தேர்கொண்டுவரச் சென்றதையும் கண்டு) தன் உள்ளத்தே நினைக்கின்றான்.
|
|
|
(வி - ம்.) 'கைகட்டி' என்பதற்கு 'கையைத் தொடராற் பிணித்து என்று பொருள் கொள்ளலாகாது என்றும், 'தடைசெய்து' என்றே பொருள் கொள்ளவேண்டும் என்றும் நச்சினார்க்கினியர் கருதுகிறார். அதற்கேற்பவே முன்னர்ப் பலவிடங்களிலும் (சீவக. 1079, 1084, 1087) தம் கருத்துக்கு அரண் செய்து வந்துளார்.
|
|
|
”கைகட்டுதலைப், 'பாம்பை வாயைக் கட்டிற்று' என்றாற்போலக் கொள்க. துறவின் கண்ணே சீவகன் அறங்கேட்ட பின்னர், 'தொல்லையெம் பிறவியும் தொகுத்த பாவமும் - வல்லையே பணிமினம் அடிகள்' என்று (சீவக. 2849) சாரணரைக் கேட்க, அவரும் பாவங் கூறுகின்றவர், தாமரைத் தடமுறை வீர்க்கிவை தடங்கள் அல்லவே வடமுலை யெனநடாய் வருடிப் பாலமு - துடனுறீஇ ஓம்பினார்' (சீவக. 2863) என்று, முலைமேலே வளர்த்தார்கள் என்று கூறிப், பவணமா தேவன் தன் மகன் அசோதரனை நோக்கிக் கூறுகின்றானாகத் தாம் கூறுகின்ற காலத்தும், 'கிளைப்பிரி வருஞ்சிறை யிரண்டுங் கேட்டியேல்' (சீவக. 2897) என்றும், 'பூவை கிளி தோகைபுணர் அன்னமொடு பன்மா - யாவை அவை தம் கிளையின் நீங்கியழ வாங்கிக் - காவல் செய்து வைத்தவர்கள் தம் கிளையின் நீங்கிப் - போவர்' (சீவக. 2875) என்றும் காவல் செய்து வைத்தார் என்றும் கூறினமையானும், மன்னா' பிரித்தாய் பிரிந்தாய் சிறை வைத்ததனாற் - பொன்னார மார்ப! சிறைப்பட்டனை போலும' (சீவக. 2860) என்று தாம் கூறினமையானும் சாரணர் பாவங் கூறுகின்ற இடத்து, அன்னப் பார்ப்பைக் கட்டினார் என்று கூறாமையின், ஈண்டுக் கட்டுண்ண வேண்டும் பாவம் ஆண்டின்மை உணர்க. இச் சமயத்தார் பிறரும். சிறுகா பெருகா முறை பிறழ்ந்து வாரா' (நாலடி. 110) என்றதனாலும் உணர்க. அன்றியும் தசகுமார சரிதத்துள் அன்னப் பார்ப்பை
|
|