| குணமாலையார் இலம்பகம் |
625 |
|
| 1090 |
தேன்பிறங் கலங்கன் மாலைச் |
| |
சுநந்தையுந் துணைவன் றானுங் |
| |
கோன்புறங் காப்பச் சேறல் |
| |
குணமெனக் கூறி னாரே. |
|
|
(இ - ள்.) ஊன் பிறங்கு ஒளிரும் வேலான் - ஊன் விளங்கி ஒளிசெய் வேலானாகிய சீவகன்; ஓர்த்துத் தன் உவாத்தி சொல்லால் தான் புறம் கட்டப்பட்டு - தான் ஆசிரியனுக்கு நேர்ந்த நிலையை உணர்ந்து தன்மெய் கட்டப்பட்டு ; தன் சினம் தணிந்து நிற்ப - தன் சீற்றம் ஆறி நின்றபோது; தேன் பிறங்கு அலங்கல் மாலைச் சுநந்தையும் துணைவன் தானும் - தேன் விளங்கி அசையும் மாலையணிந்த சுநந்தையும் அவள் கணவனும்; கோன்புறம் காப்பச் சேறல் குணம் எனக் கூறினார் - அரசன் காப்பச் செல்லுதல் குடிகட்குக் குணம் என்று சொல்லினர்.
|
|
|
(வி - ம்.) முன்னர் அகப்பொருளே நிகழ்த்தினவன் பகைவரைக் கண்டு புறப்பொருள் நிகழ்த்தக் கருதியதனை ஆசிரியன் கூற்று விலக்கிற்றென்பது தோன்ற 'புறம் கட்டப்பட்டு' என்றார். அச் சொல் அரிய தொன்றனை விளக்கிற்று.
|
|
|
இங்கு நச்சினார்க்கினியர், 'புறம் கட்டப்பட்டு' என்பதற்கு 'வீரம் பிணிப்புண்ணப்பட்டு' என்று பொருள் கூறுகின்றார்.
|
( 240 ) |
| 1091 |
ஈன்றதாய் தந்தை வேண்ட |
| |
விவ்விட ருற்ற தென்றாற் |
| |
றோன்லுக் காண்மை குன்றா |
| |
தென்றசொல் லிமிழிற் பூட்டி |
| |
மூன்றனைத் துலக மெல்லா |
| |
முட்டினு முருக்கு மாற்றல் |
| |
வான்றரு மாரி வண்கை |
| |
மதவலி பிணிக்கப் பட்டான். |
|
|
(இ - ள்.) ஈன்ற தாய் தந்தை ஏவ இவ்இடர் உற்றது என்றால் - பெற்ற அன்னையும் தந்தையும் ஏவியதால் இத் துனபம் நேர்ந்தது என்றது உலகம் கூறின் ; தோன்றலுக்கு ஆண்மை குன்றாது - நினக்கு வீரம் மாசுறாது ; என்ற சொல் இமிழின் பூட்டி - என்று பெற்றோர் கூறிய சொல்லாலே கயிறுபோலக் கட்டப்பட்டு; மூன்று உலகனைத்தும் எல்லாம் முட்டினும் - மூன்றாகிய உலகம் அனைத்தும் அங்குள்ள எல்லாமும் தாக்கினும் ; முருக்கும் ஆற்றல் - அவற்றையெல்லாம் கெடுக்கும் ஆற்றலையுடைய; வான்தரு மாரி வண்கை மதவலி - கற்பகத் தருவையும் மாரியையும் நிகர்க்கும் வண்கையினையும் உடைய
|
|