பக்கம் எண் :

                           
குணமாலையார் இலம்பகம் 626 

பெருவலி படைத்த சீவகன் ; பிணிக்கப்பட்டான் - கட்டப் பட்டான்.

 

   (வி - ம்.) இன் : உவமப் பொரு. இங்கு, 'அச் சொல் கயிற்றாற் பிணித்தாற் போல மனத்தைப் பிணித்தது. ஈண்டு, இவர் கட்டிற்றில ரெனவே இளையரான் (ஏவலரால்) மேற்கட்டலாகாமையும் உணர்க' என்று உணர்க என்பர் நச்சினார்க்கினியர்.

( 241 )

வேறு

 
1092 குழலுடைச் சிகழிகைக் குமரன் றோளிணை
கழலுடை யிளையவர் கச்சின் வீக்கலி
னழலுடைக் கடவுளை யரவு சோ்ந்தென
விழவுடை முதுநகர் விலாவிக் கின்றதே.

   (இ - ள்.) குழலுடைச் சிகழிகைக் குமரன் தோளிணை - குழற்சியாகிய முடியினையுடைய சீவகன் தோளிணைகளை ; அழல் உடை கடவுளை அரவு சேர்ந்தென - ஞாயிற்றைப் பாம்பு சேர்ந்தாற்போல ; கழல் உடை இளையவர் கச்சின் வீக்கலின் - கழலணிந்த ஏவலர் கச்சினாற் கட்டியதால் ; விழவுடை முதுநகர் விலாவிக்கின்றது - திருவிழா மலிந்த பழம்பதி அழாநின்றது.

 

   (வி - ம்.) இங்கும் நசசினார்க்கினியர், 'வீக்கலின்' என்பதிலுள்ள 'இன்: உவமப்பொரு' என்றும் பாம்பு ஞாயிற்றை ஒளி குறைய மறைத்தாற்போல இவரும் இவன் ஒளி குறையுமாறு சிறையாகக் கொண்டாரென்க. மனத்தை இறுகப் பிணிக்கவே தோளைப் போர்த்தொழிலை விலக்கிற்றாம்' என்றும் விளக்கங் கூறுவர்.

 

   மற்றும் அவர், 'குமரன் தோளிணைகளைக் குரவர் அங்ஙனங் கச்சிட்டுக் கட்டினாற்போலப் போர்த்தெ்ழில் செய்யாதபடி விலக்கினார்களாக, வந்த இளையவர் ஞாயிற்றை அரவம் சேர்ந்தென்னச் சேர்தலின்' என்று பொருள் கூறுவர்.

( 242 )

வேறு

 
1093 தோளார் முத்துந் தொன்முலைக் கோட்டுத் துயன்முத்தும்
வாளா ருண்கண் வந்திழி முத்தும் மிவைசிந்தக்
காளாய் நம்பி சீவக சாமி யெனநற்றாய்
மீளாத் துன்ப நீள்கடன் மின்னின் மிசைவீழ்ந்தாள்.

   (இ - ள்.) தோள் ஆர் முத்தும் - தோளில் அணிந்த முத்துக்களும்; தொல்முலைக் கோட்டுத் துயல் முத்தும் - முதிய முலைச் சிகரத்திலே அசையும் வடத்திலுள்ள முத்துக்களும் ; வாள்ஆர் உண்கண் வந்து இழிமுத்தும் - வாளனைய மையுண்ட கண்களிலிருந்து வந்து சிந்தும் கண்ணீராகிய முத்துக்களும்;