பக்கம் எண் :

                       
குணமாலையார் இலம்பகம் 627 

இவை சிந்த - (ஆகிய) இவை சிந்தும்படி ; காளாய்! நம்பி! சீவகசாமி ! என - காளையே ! நம்பியே ! சீவகசாமியே ! என்று கதறி; மீளா துன்ப நீள்கடல் மிசை - மீளமடியாத துன்பமாகிய பெருங்கடலிலே; மின்னின் - மின்போல; வீழ்ந்தாள் - விழுந்தனள்.

 

   (வி - ம்.) மகப்பெற்று முதிர்ந்தாளாதலின் 'தொன்முலை' என்றார். தொன்மையை முத்துக்களுக்குக் கூட்டுக என்பர் நச்சினார்க்கினியர். மற்றும், 'மீளா' என்பதற்கு 'மீண்டு' என்று பொருள் கொண்டு 'காரியத்தின் மேற்சென்ற கருத்து மீண்டும்' என்றும், 'துன்பமாகிய கடல் - அழுகின்ற மக்கட் டொகுதி' என்றும் உரைப்பர்.

( 243 )
1094 பாலா ராவிப் பைந்துகி லேந்திப் படநாகம்
போலா மல்குற் பொற்றொடி பூங்கட் குணமாலை
யேலா தேலா தெம்பெரு மானுக் கிஃதென்னா
நூலார் கோதை நுங்கெரி வாய்ப்பட் டதுவொத்தாள்.

   (இ - ள்.) பால்ஆர் ஆவிப் பைந்துகில் ஏந்தி - பாலாவி போன்ற புத்தாடையை ஏந்தி ; படநாகம் போல் ஆம் அல்குல் - நாகத்தின் படம் போன்றமைந்த அல்குலையும் ; பொன்தொடி - பொன் வளையலையும்; பூகண் குணமாலை - அழகிய கண்களையும் உடைய குணமாலை ; எம்பெருமானுக்கு இஃது ஏலாது ஏலாது என்னா - எம் உயிரைக் காத்த நுமக்கு அதனால் இத் தீங்கு வருதல் தகாது தகாது என்று புலம்பி ; நூல் ஆர் கோதை நுங்கு எரிவாய்ப்பட்டது ஒத்தாள் - நூலிற் பொருந்திய மலர் மாலை விழுங்கும் தீயிலே வீழ்ந்தது போன்றாள்.

 

   (வி - ம்.) பாலாவி - பாலில் எழுந்த புகை : 'பானீர் நெடுங்கடற் பனிநாளெழுந்த - மேனீ ராவியின் மெல்லி தாகிய - கழுமடிக் கலிங்கம்' (பெருங்கதை. 2.7 : 154-6) என்றார் பிறரும்.

( 244 )

வேறு

 
1095 எரிதவழ் குன்றத் துச்சி யிரும்பொறிக் கலாப மஞ்ஞை
யிரிவன போன்று மாடத் தில்லுறை தெய்வ மன்னார்
பரிவுறு மனத்தி னோடிப் பட்டதை யுணர்ந்து பொற்றா
ரரியுறழ் மொய்ம்ப வோவென் றாகுலப் பூசல் செய்தார்.

   (இ - ள்.) எரிதவழ் குன்றதது உச்சி இருஞ்சிறைக் கலாப மஞ்ஞை இரிவன போன்று - நெருப்புப் பரவிய மலையின் உச்சியிலே பெரும் புள்ளிகளையுடைய கலவங்கொண்ட மயில்கள் கெட்டோடுவன போல ; இல்உறை தெய்வம் அன்னார் - வீட்டுத் தெய்வம் போன்ற மகளிர் ; பரிவுறு மனத்தின் மாடத்து ஓடி -