| குணமாலையார் இலம்பகம் |
628 |
|
|
வருத்தம் உற்ற மனத்துடன் மாடத்திற்கு ஓடி ; பட்டதை உணர்ந்து - நிகழ்ந்ததை அறிந்து ; பொன்தார் அரி உறழ் மொய்ம்ப ! ஓ! என்று - பொன்மாலை அணிந்த சிங்கம் போன்ற வலிமிகு தோளானே! ஓ! என்று; ஆகுலப் பூசல் செய்தார் - வருத்தத்தையுடைய ஆரவாரத்தை யுண்டாக்கினர்.
|
|
|
(வி - ம்.) இரும்பொறி - பெரிய புள்ளிகள். கலாபம் - தோகை. மஞ்ஞை - மயில். இரிவன - கெட்டோடுவன. இல்லுறை தெய்வம் - இல்லங்களிலே உறைகின்ற தெய்வம். அரி - சிங்கம் உறழ் : உவமவுருபு. ஆகுலப்பூசல் - துன்ப ஆரவாரம்.
|
( 245 ) |
| 1096 |
கங்கையின் சுழியிற் பட்ட |
| |
காமரு பிணையின் மாழ்கி |
| |
யங்கவர்க் குற்ற துள்ளி |
| |
யவலநீ ரழுந்து கின்ற |
| |
குங்குமக் கொடியோ டேந்திக் |
| |
கோலம்வீற் றிருந்த கொம்மைப் |
| |
பொங்கிள முலையி னார்க்குப் |
| |
புலவல னிதனைச் சொன்னான். |
|
|
(இ - ள்.) கங்கையின் சுழியில் பட்ட காமரு பிணையின் மாழ்கி - கங்கை நீர்க் சுழியிலே அகப்பட்ட அழகிய பெண்மான்களைப்போல வருந்தி; அங்கு அவர்க்கு உற்றது உள்ளி - அம்மாடத்திலே சுநந்தை முதலாயினோர்க்கு நேர்ந்த துயரத்தை எண்ணி ; அவலநீர் அழுந்துகின்ற - கவலை நீரிலே அழுந்திய; குங்குமக் கொடியோடு ஏந்தி - குங்குமத்தையும் தொய்யிற் கொடியையும் ஏந்தி ; கோலம் வீற்றிருந்த - அழகுத் தெய்வம் வீற்றிருந்த ; கொம்மை பொங்கு இளமுலையினார்க்கு - பருத்த இளமுலையாராகிய புறமகளி்ர்க்கு ; புரவலன் இதனைச் சொன்னான் - சீவகன் இதனைக் கூறினான்.
|
|
|
(வி - ம்.) வந்த இளையரைக் கொல்லாது விடுதலிற் புரவலன் என்றார்.
|
|
|
கங்கை நீர்ச்சுழி - துன்பத்திற்குவமை. காமருபிணை - விரும்புதற்குக் காரணமான பெண்மான். அவலநீர் என்புழி 'நீர் ' கடல் என்னும் பொருட்டு. கோலம் - அழகுத் தெய்வம். கொம்மை - பெருமை. புரவலன் - இகழ்ச்சியுமாம்.
|
( 246 ) |
| 1097 |
கட்டுயி லனந்தர் போலக் கதிகளுட் டோன்று மாறும் |
| |
விட்டுயிர் போகு மாறும் வீடுபெற் றுயரு மாறு |
| |
முட்பட வுணர்ந்த யானே யுள்குழைந் துருகல் செல்லே |
| |
னெட்பக வனைத்து மார்வ மேதமே யிரங்கல் வேண்டா. |
|