பக்கம் எண் :

                       
குணமாலையார் இலம்பகம் 629 

   (இ - ள்.) கண்துயில் அனந்தர் போலக் கதிகளுள் தோன்றும்ஆறும் - கண்ணுறக்கமும் விழிப்பும் போலப் பல பிறவிகளினும் பிறக்கும்படியும்; விட்டு உயிர்போகும் ஆறும் - உடலைவிட்டு உயிர் போகும்படியும் ; வீடுபெற்று உயரும் ஆறும் - வீடடைந்து மேம்படும்படியும்; உள்பட உணர்ந்த யானே - மனம் பொருந்த அறிந்த யானே; உள் குழைந்து உருகல் செல்லேன் - மனங்குழைந்து உருகலிற் போகேன் ; ஆர்வம் எள்பகவு அனைத்தும் ஏகமே - ஆசை எள்ளின் பிளவவ்வளவே எனினும் துன்பமே ; இரங்கல் வேண்டா - (எனவே) வருந்தல் வேண்டா.

 

   (வி - ம்.) கண்துயில் அனந்தர்போல விட்டு உயிர் போகுமாறும் என மாறிக் கண்துயிலுதற்குக் காரணமான உறக்கம்போன்று உயிர் இவ்வுடலை விட்டுப் போம்படியும் அவ்வுயிர் மீண்டு விழித்தல்போன்று பிறக்கும்படியும் என அனந்தர்போல என்றமையாட்ல விழிப்புப்போல என வருவித்துப் பொருள் கூறலே நன்று. இதே நச்சினார்க்கினியர் கருத்து. அனந்தர் - உறக்கம்.

 

   இதனால் இன்ப துன்பமிரண்டினையும் சமமாக ஏற்றுக்கொள்ளும் சீவகன் மனநிலையினை ஆசிரியர் உணர்த்துகின்றார்.

 

   ”மெய்த்திருப்பத மேவென்ற போதினும், இத்திருத்துறந்தேகென்ற போதினும், சித்திரத்தி னலர்ந்தசெந் தாமரை, ஒத்திருந்த முகத்தினை உன்னுவாள்,” எனக் கம்பநாடரும் இராமன்பால் இப்பெருமையைக் காட்டுதல் உணர்க.

 
  ”உறங்குவது போலும் சாக்காடு உறங்கி  
  விழிப்பது போலும் பிறப்பு” (குறள் - 339)  

   என்னும் திருக்குறளை இதனோடு நினைக.

( 247 )
1098 நன்மணி யிழந்த நாகர்
  நல்லிளம் படியர் போல
வின்மணி யிழந்த சாம்பி
  யிருநில மிவர்க ளெய்த
மின்னணி மதியங் கோள்வாய்
  விசும்பிடை நடப்ப தேபோற்
கன்மணி யுமிழும் பூணான்
  கடைபல கடந்து சென்றான்.

   (இ - ள்.) கல்மணி உமிழும் பூணான் - (இங்ஙனம் அறிவுரை கூறியபின்) கல்லிற் பிறந்த மணிகளின் ஒளியுமிழும் அணிகலனுடையான் ; நல்மணி இழந்த நாகர் நல்இளம்படியர் போல - அழகிய மாணிக்கத்தை இழந்த அழகிய நாகரிள மகளிரைப் போல ; இவர்கள் இல்மணி யிழந்து சாம்பி இருநிலம் எய்த -