பக்கம் எண் :

                       
குணமாலையார் இலம்பகம் 631 

ஆர்ந்த குண்டலம் வில்விலங்க - பொருந்திய குண்டலம் ஒளி வீச ; மின்னுக் கோட் வீணை விட்டு - ஒளி பொருந்திய கோடு என்னும் உறுப்பினையுடைய வீணையை விட்டு ; வெய்து உராய் - விரைந்து பரவி ; ஒல் எனக் சிலம்பு அரற்ற - ஒல்லென்னும் ஒலியுடன் சிலம்புகள் ஒலிக்க ; வீதி மல்க ஓடினார் - தெரு நிறைய ஓடிவந்தனர்.

 

   (வி - ம்.) கோட்ட - கோட்டையுடைய; கோடு - தண்டு. வில் - ஒளி. சில்சுணங்கு - சிலவாகிய தேமல்.

( 250 )
1101 நெய்த்தலைக் கருங்குழ னிழன்றெருத் தலைத்தர
முத்தலைத் திளம்முலை முகஞ்சிவந் தலமரக்
கைத்தலங் கடுத்தடித்த பந்துநீக்கி வந்தவண்
மைத்தலை நெடுந்தடங்கண் மங்கையர் மயங்கினார்.

   (இ - ள்.) மைத்தலை நெடுந்தடம் கண் மங்கையர் - மை தீட்டிய நீண்ட பெரிய கண்களையுடைய மங்கைப் பருவத்தார்; நெய்த்தலைக் கருங்குழல் நிழன்று எருத்து அலைத்தர - புழுகு பூசிய கரிய குழல் பிடரிலே ஒளிவீசி அலைய ; இளமுலை முகம் சிவந்து முத்து அலைத்து அலம்வர - இளமுலை முகம் சிவக்க முத்து வடம் அலைத்து அசைய; கைத்தலம் கடுத்து அடித்த பந்து நீக்கி வந்து - கைகள் கடுக்க விரைந்தடித்த பந்தைவிட்டு வந்து; அவண் மயங்கினார் - சீவகன் வரும் நெற்றியிலே மயங்கி நின்றனர்.

 

   (வி - ம்.) சிவந்து - சிவக்க, கடுத்து - கடுக்க ; எச்சத்திரிபுகள்.

 

   நெய் - புழுகு. குழல் - கூந்தல். எருத்து - பிடர். முத்தலைத்தலான் என்க. கடுத்து - கடுப்ப. அவண் - அவ்விடத்து.

( 251 )
1102 கோதைகொண்ட பூஞ்சிகைக் கொம்மைகொண்ட வெம்முலை
மாதுகொண்ட சாயலம் மடந்தையர் மனங்கசிந்
தோதமுத் துகுப்பபோ லுண்கண்வெம் பனியுகுத்
தியாதுசெய்க மையவென் றன்புமிக் கரற்றினார்.

   (இ - ள்.) கோதை கொண்ட பூஞ்சிகை - மாலையணிந்த கூந்தலினையும் ; கொம்மை கொண்ட வெம்முலை - பருத்த விருப்பூட்டும் முலைகளையும் ; மாது கொண்ட சாயலின் - காதல் தோன்றும் மென்மையினையும் உடைய; மடந்தையர் - மடந்தைப் பருவ மகளிர் ; மனம் கசிந்து - உள்ளம் உருகி ; ஓதம் முத்து உகுப்பபோல் உண்கண் வெம்பனி உகுத்து - கடல் முத்துக்களைச் சிந்துதல் போல மையிண்ட கண்களினின்றும் வெதும்பிய பனித் துளிகளைச் சிந்தி ; யாது செய்கம் ஐய! என்று அன்பு