| குணமாலையார் இலம்பகம் |
636 |
|
|
(இ - ள்.) தூக்குமின் ! - ஆராய்ந்து பாருங்கோள் ; காளை துற்றுச் சீறின் இவன் உளனோ? என்பார் - சீவகன் நெருங்கிச் சீறின் இம் மதனன் இருப்பானோ என்பார் ; காவலன் ஆகி வையம் எல்லாம் காக்கும் என்பார் - இவன் மேலும் அரசனாகி உலகம் எல்லாம் காப்பான் என்பார் ; பாக்கியமே பெரிதுகாண் இதுவும் ஓர் பான்மை என்பார் - இவனுக்கு நல்வினையே மிக்குள்ளது, எனினும், இஃது ஒரு தீவினைப் பயன் என்பார்; நுதிகொள் நாகரிகன் நாணும் - கூரிய பலகலை வல்லோன் ஆகையால் நாணுறுவான் ; நோக்கன்மின் என்பார் - (ஆகையால்) அவனை நோக்காதீர்கள் என்பார்.
|
|
|
(வி - ம்.) பெரிதும் : உம் இசை நிறை. பெரிதுமே என்பதிலுள்ள 'ஏ' யைப் 'பாக்கியமே' எனப் பிரித்துக் கூட்டுக. கண்டீர் : முன்னிலையசை.
|
( 260 ) |
| 1111 |
பூவரம் பாய கோதைப் பொன்னனார் புலவி நீக்கி |
| |
நூபுரந் திருத்திச் சேந்த நுதிவிர னொந்த வென்பார் |
| |
யாவரும் புகழு மைய னழகுகெட் டொழியு மாயிற் |
| |
கோபுர மாட மூதூர் கூற்றுண விளிக வென்பார். |
|
|
(இ - ள்.) பூவரம்பு ஆய கோதைப் பொன்னனார் புலவி நீக்கி - மலர்களுக்கு எல்லையான மாலையை அணிந்த திருவனை யாரின் பிணக்கை நீக்கி; நூபுரம் திருத்திச் சேந்த - சிலம்பைத் திருத்திச் சிவந்த ; விரல்நுதி நொந்தது என்பார் - விரல்நுனி (கட்டப்பட்டதனால்) வருந்திற்று என்பார் ; யாவரும் புகழும் ஐயன் அழகு கெட்டு ஒழியும் ஆயின் - எல்லோராலும் புகழப்படும் சீவகனுடைய அழகு கெட்டேவிடுமெனின் ; கோபுரம் மாடம் மூதூர் கூற்று உணவிளிக என்பார் - கோபுரமும் மாடமும் இம் மூதூர் முற்றும் காலன் கொள்ள அழிக என்பார்.
|
|
|
(வி - ம்.) 'விரல்கள், வீரத்திற்கும் காமத்திற்கும் கொடை முதலியவற்றிற்கும் தோற்றிய யாம், ஈண்டு இவன் வீரஞ் செய்யாமையின் வீரத்திற்கு உதவியாயிற்றிலேம் என்று நொந்தன்' என்று விளக்கங் கூறுவர் நச்சினார்க்கினியர்.
|
( 261 ) |
| 1112 |
கருஞ்சிலை மறவர் கொண்ட கணநிரை விடுக்க வல்ல |
| |
விருஞ்சிலை பயின்ற திண்டோட் கிதுதகா தென்றுகுன்றிற் |
| |
கருங்கட றுளுப்பிட் டாங்குக் கல்லெனக் கலங்கிக் காம |
| |
ரருங்கடி யரண மூதூ ராகுல மயங்கிற் றன்றே. |
|
|
(இ - ள்.) கருஞ்சிலை மறவர் கொண்ட கணநிரை விடுக்க வல்ல - கொடிய வில்லேந்திய வேடர் கொண்ட திரளான ஆணிரையை மீட்கும் வலிமையுள்ள ; இருஞ்சிலை பயின்ற திண்
|
|