பக்கம் எண் :

                 
குணமாலையார் இலம்பகம் 643 

1122 நஞ்சனா னுரைப்பக் கேட்டே
  நாய்கனு நடுங்கி யுள்ளம்
வெஞ்சின வேழ முண்ட
  விளங்கனி போன்று நீங்கி
யெஞ்சினான் போல நின்றா
  னேத்தருந் தவத்தின் மிக்க
வஞ்சமில் கொள்கை யான்சொ
  லமிர்தினால் வற்புற் றானே.

   (இ - ள்.) நஞ்சு அனான் உரைப்பக் கேட்டு - நஞ்சு போன்ற கட்டியங்காரன் இவ்வாறு சொல்லக் கேட்டு; நாய்கனும் நடுங்கி - கந்துகனும் அச்சுற்று ; வெஞ்சின வேழம் உண்ட விளங்கனி போன்று உள்ளம் நீங்கி - கொடிய சினமுடைய களிறு என்னும் நோயால் உண்ணப்பட்ட விளம்பழம்போல வெறுமையாக அறிவு முதலியன நீங்கி ; எஞ்சினான் போல நின்றான் - இறந்தான் போல நின்றவன் ; ஏத்த அருந் தவத்தின் மிக்க - புகழ்தற்கரிய தவத்திற் சிறந்த ; வஞ்சம்இல் கொள்கையான் - தூய முனிவனுடைய ; சொல் அமிர்தினால் வற்பு உற்றான் - சொல்லாகிய அமிர்தத்தினால் உளவலிமை பெற்றான்.

 

   (வி - ம்.) நஞ்சனான் என்றது அவன் சச்சந்தனைக் கொன்ற கொடுமை குறித்துநின்றது. வேழம் - விளங்கனியிற்படுவதோர் நோய் அப்பெயருடைய யானைக்கியன்ற அடையோடு வந்தது. எஞ்சினான் - இறந்தோன்.

( 272 )
1123 மின்னிலங் கெஃகி னானைப்
  பெறுகலான் றந்தை மீண்டு
தன்னிலங் குறுக லோடுந்
  தாயழு தரற்று கின்றா
ளென்னிலை யைற் கென்ன
  யாவதுங் கவல வேண்டா
பொன்னலங் கொடிய னாயோர்
  பொருளுரை கேளி தென்றான்.

   (இ - ள்.) மின் இலங்கு எஃகினானைப் பெறுகலான் - ஒளி விடும் வேலேந்திய சீவகனை மீட்காமல் ; தந்தை மீண்டு தன் இலம் குறுகலோடும் - தந்தை திரும்பித் தன் மனையை அடைந்தவுடன் ; தாய் அழுது அரற்றுகின்றாள் - தாய் அழுது அரற்று கின்றவளாய் ; ஐயற்கு என் நிலை ? என்ன - நம் ஐயனுக்கு நிலை ஏது ? என்ன ; பொன்நலம் கொடியனாய் !- பொன்னாலான