| குணமாலையார் இலம்பகம் |
646 |
|
| 1127 |
ஆறெலாங் கடலுள் வைகு |
| |
மருந்தவத் திறைவ னூலுள் |
| |
வேறெலாப் பொருளும் வைகும் |
| |
விழுத்தவ வறிதி நீயே |
| |
யூறிலா வுணர்வி னோக்கி |
| |
யுரைமதி யெவன்கொன் மக்கட் |
| |
பேறிலா ளல்லள் பெற்ற |
| |
வுயிர்சென்று பிறக்கு மென்றேன். |
|
|
(இ - ள்.) விழுத்தவ! - சிறந்த தவமுடையானே!; ஆறு எலாம் கடலுள் வைகும் - ஆறுகள் யாவும் கடலிலே தங்கும் (அதுபோல) ; அருந்தவத்து இறைவன் நூலுள் வேறு எலாப் பொருளும் வைகும் - அரிய தவத்தினையுடைய அருகன் ஆகமத்திலே வேறு வேறுபட்ட எல்லா நூல்களின் பொருளும் தங்கும் ; நீயே அறிதி - நீயே அப் பொருள்களை அறிவாய்; ஊறு இலா உணர்வின் நோக்கி உரைமதி - கெடுதியில்லா அறிவுடன் ஆராய்ந்து கூறுக; மக்கள்பேறு இலாள் அல்லள் பெற்ற உயிர் எவன்கொல் சென்று பிறக்கும் ? என்றேன் - குழந்தைப் பேறில்லாதவள் அல்லள் ஆகிய இவள் பெற்ற உயிர் எங்கே சென்று பிறக்கும் என்றேன்.
|
|
|
(வி - ம்.) 'இவள் மக்கட் பேறில்லாதவளல்லள் ; பெற்ற மக்களுயிர் மற்றோரிடத்தே சென்று பிறக்கும் ; இனிப் பிள்ளை எத்தன் மைத்து?” என்று பொருளுரைப்பர் நச்சினார்க்கினியர். அருகனாமத்துள் எல்லாம் அடங்குதலின் அதனையறிந்த நீ கணித நிலையும் அறிவாய் என்ற கருத்துடன் இங்ஙனம் வினவினான்.
|
|
|
கரகம் - கமண்டலம். தூய்நீர் மணிநீர் வாசநீர் நன்னீர் எனத் தனித்தனி கூட்டுக. தோளி : முன்னிலைப்புறமொழி ; நீ என்பது பொருள். விழுத்தவன் - சிறந்த தவத்தையுடையவன். நியமம் - ஒழுக்கமுறைமை.
|
( 277 ) |
| 1128 |
வம்பவிழ் கோதை தந்த |
| |
வான்றுவர்க் காயை வீழ்த்தோர் |
| |
செம்பழுக் காயை வாங்கித் |
| |
திருநிலத் தெடுத்துக் கொண்டாங் |
| |
கம்பழ நீண்ட வாட்க |
| |
ணலமரு மணிசெ யம்பூங் |
| |
கொம்படு நுசுப்பி னாய்க்குத் |
| |
தந்தனென் பேணிக் கொண்டாய். |
|