| குணமாலையார் இலம்பகம் |
648 |
|
|
இனி, 'அற்றம் இன் மணியை அங்கையிற் கொண்டோர் அம் மணியை நன்றாக அறியுமாறு போல' என உவமையாகக் கூறின் பன்மையொருமை மயக்கம் இராது.
|
( 279 ) |
|
|
| 1130 |
ஒன்றுநீர் கவலல் வெண்டா |
| |
வுலகெலா மாளுஞ் சீர்த்திப் |
| |
பொன்றிக ழுருவி னானோர் |
| |
புண்ணியற் பெறுதி ரென்ன |
| |
நின்றநீ யுவந்து நீங்க |
| |
நிகழ்பொரு ளெனக்குச் செப்பிப் |
| |
பின்றையு நிகழ்வ துண்டு |
| |
பேசுவல் கேளி தென்றான். |
|
|
(இ - ள்.) ஒன்றும் நீர் கவலல் வேண்டா - எதற்கும் நீர் வருந்த வேண்டா ; உலகு எலாம் ஆளும் சீர்த்தி - உலகமெல்லாம் ஆளும் சிறப்பினையுடைய ; பொன்திகழ் ஒளியினான் ஓர் புண்ணியன் பெறுதிர் என்ன - பொன்போல் விளங்கும் ஒளியையுடைய நன்மகனைப் பெறுவீர் என்று கூற ; நின்ற நீ உவந்து நீங்க - (அதனைக் கேட்டு) ஆங்கு நின்ற நீ மகிழ்ந்து செல்ல, அதன்பின் ; நிகழ்பொருள் எனக்குச் செப்பி - (அம் மகனுக்குப் பிறப்பு முதல் துறவளவும்) நிகழ்பொருளை எனக்குக் கூறி ; பின்றையும் நிகழ்வதுண்டு - பின்னர் நிகழுமொரு துன்பமும் உண்டு ; பேசுவல் இது கேள் என்றான் - கூறுவேன் ; இதனைக் கேள் என்று மேற்கூறினான்.
|
|
|
(வி - ம்.) பெறுதிர் என்றது சுநந்தைக்குப் பிள்ளை பெறுவை என்றாற் போலிருந்தது. அவன் கூறியது வளர்க்கப் பெறுவீர் என்று.
|
( 280 ) |
| 1131 |
நிலவுறழ் பூணி னானை |
| |
நெடுநக ரிரங்கக் கையாத் |
| |
தலபல செய்து கொல்வா |
| |
னருளிலான் கொண்ட போழ்திற் |
| |
குலவிய புகழி னானைக் |
| |
கொண்டுபோ மியக்க னஞ்சல் |
| |
சிலபகல் கழிந்து காண்டி |
| |
சிந்தியீ தென்று சொன்னான். |
|
|
(இ - ள்.) நிலவு உறழ் பூணினானை - நிலவை மாறுபடும் ஒளியுறு பூணினையுடையவனை; நெடுநகர் இரங்கக் கையாத்து - பெருநகர் புலம்பக் கையைப் பிணித்து; அலபல செய்து கொல்வான் - தகவற்றன பல செய்து கொல்வதற்கு ; அருள்
|
|