| குணமாலையார் இலம்பகம் |
649 |
|
|
இலான் கொண்ட போழ்தில் - இரக்கமற்ற கட்டியங்காரன் கொண்ட காலத்தில் ; குலவிய புகழினானை இயக்கன் கொண்டுபோம் - பொருந்திய புகழுடையானை ஓர் இயக்கன் அழைத்துச் சென்றுவிடுவான் ; அஞ்சல் -அஞ்சற்க ; சில பகல் கழிந்து காண்டி - சில நாட்கள் கழித்துக் காண்பாய் ; ஈது சிந்தி என்று சொன்னான் - இதனை நீ சீந்திக்க என்றுரைத்தான்.
|
|
|
(வி - ம்.) 'நீங்கள் அலபல செய்து பூணினானைக் கையைத் தொழில் செய்யாதவாறு பண்ணுதலாலே' என்பர் நச்சினார்க்கினியர். அதனானே நீயும் வருந்தாதே என்று ஆறுதல் கூறினான் கந்துகன்.
|
( 281 ) |
| 1132 |
வசையற நிறைந்த கற்பின் |
| |
மாலையு மாமி தானுந் |
| |
தசையற வுருகி வெந்து |
| |
தம்முயிர் நீங்கு மாங்க |
| |
ணொசிதவன் சொற்க ளென்னு |
| |
நோன்புணை தழுவி நெஞ்சிற் |
| |
கசிவெனுங் கடலை நீந்திக் |
| |
கரையெனுங் காலை கண்டார். |
|
|
(இ - ள்.) வசை அற நிமிர்ந்த கற்பின் மாலையும் மாமிதானும் - பழிப்பு நீங்க உயர்ந்த கற்பினையுடைய குணமாலையும் சுநந்தையும் ; தசை அற உருகி வெந்து தம் உயிர் நீங்கும் அங்கண் - தசையின்றி மெலிந்து வெதும்பித் தம் உயிரை விடும் நிலை வந்தபோது ; நொசி தவன் சொற்கள் என்னும் நோன்புணை தழுவி - நுண்ணிய தவத்தினனுடைய சொற்களாகிய வலிய தெப்பத்தைக் கைப்பற்றி ; நெஞ்சில் கசிவு எனும் கடலை நீந்தி - உள்ளத்தே வருத்தம் என்கிற கடலைக் கடந்து ; காலையெனும் கரை கண்டார்; (எட்டுத் திங்க்ள் என்னும்) காலையாகிய கரையைக் கண்டனர்.
|
|
|
(வி - ம்.) எட்டுத் திங்கள் கழிந்து சீவகனைக் கண்டார். ஆதலின் எட்டுத் திங்கள் என்கிற காலை என்றார் நச்சினார்க்கினியர்.
|
( 282 ) |
| 1133 |
திருக்குழன் மகளிர் நையச் |
| |
சீவக சாமி திண்டோள் |
| |
வரிக்கச்சிற் பிணிக்கப் பட்டான் |
| |
மன்னனா லென்னக் கேட்டே |
| |
தருக்குடை வேழம் வாளார் |
| |
ஞாட்பினுட் டகைமை சான்ற |
| |
மருப்புட னிழந்த தொத்தார் |
| |
மன்னுயிர்த் தோழன் மாரே. |
|