| குணமாலையார் இலம்பகம் |
650 |
|
|
(இ - ள்.) திருக்குழல் மகளிர் நைய - அழகிய குழலையுடைய மகளிர் வருந்துமாறு ; மன்னனால் சீவகசாமி திண்தோள் வரிக்கச்சின் பிணிக்கப்பட்டான் - அரசனாற் சீவகன் தன் திண்ணிய தோள்கள் வரிதலையுடைய கச்சினாற் கட்டப்பட்டான் ; என்னக் கேட்டு - என்று கேள்வியுற்று ; மன் உயிர்த் தோழன் மார் - நிலைபெற்ற உயிரனைய தோழர்கள் ; வாள்ஆர் ஞாட்பினுள் - வாளேந்திச் செய்யும் போரிலே ; தருக்கு உடைவேழம் - செருக்குற்ற களிறு ; தகைமை சான்ற மருப்பு உடன் இழந்தது ஒத்தார் - சிறப்புற்ற மருப்புகளைச் சேர இழந்தனைப் போன்றனர்.
|
|
|
(வி - ம்.) இங்கும் நச்சினார்க்கினியர், 'தன் தோளை இருமுது குரவராலே கச்சினாற் கட்டினாற் போலத் தொழில் செய்யாதபடி பண்ணப்பட்டான்' என்பர்.
|
( 283 ) |
| 1134 |
நட்டவற் குற்ற கேட்டே |
| |
பதுமுக னக்கு மற்றோர் |
| |
குட்டியைத் தின்ன லாமே |
| |
கோட்புலி புறத்த தாகக் |
| |
கட்டியங் கார னென்னுங் |
| |
கழுதைநம் புலியைப் பாய |
| |
வொட்டியிஃ துணர லாமே |
| |
யுரைவல்லை யறிக வென்றான். |
|
|
(இ - ள்.) நட்டவற்கு உற்ற கேட்டு - தன் நண்பனுக்கு நேர்ந்தவற்றைக் கேட்டு ; பதுமுகன் நக்கு - பதுமுகன் நகைத்து; கோள் புலி புறத்தது ஆகக் குட்டியைத் தின்னல் ஆமே?- கொல்லவல்ல புலி காத்துக்கொண்டிருக்க (மற்றொன்றாற்) குட்டியைத் தின்ன இயலுமோ? இயலாது ; கட்டியங்காரன் என்னும் கழுதை நம் புலியைப் பாய - கட்டியங்காரன் எனப்படுங் கழுதை நம் புலியைப் பாய்வதற்கு ; ஒட்டி இஃது உணரலாமே?- நாமும் மெய்யென்று நம்பிப் பொருந்தி உணர்த்ல் ஆகாது ; உரைவல்லை அறிக என்றான் - உரைவல்லவனே! இதனை அறிந்து வருக என்று ஒற்றனிடம் கூறினான்.
|
|
|
(வி - ம்.) தான் காத்தற் றொழிலையுடைமையின் குட்டியென்றான். 'மடங்கலாற்றற் பதுமுகன் காக்க' (சீவக. 1896) காண்க.
|
( 284 ) |
| 1135 |
சிலையொடு செல்வ னின்றாற் |
| |
றேவரும் வணக்க லாற்றார் |
| |
முலையுடைத் தாயோ டெண்ணித் |
| |
தந்தையிக் கொடுமை செய்தான் |
| |
கலைவல்லீ ரின்னுங் கேண்மி |
| |
னின்னதென் றுரைக்கு மாங்கண் |
| |
விரைவொடு சென்ற வொற்றாள் |
| |
விளைந்தவா பேசு கின்றான். |
|