பக்கம் எண் :

                 
குணமாலையார் இலம்பகம் 652 

1137 பிடியொடு நின்ற வேழம்
  பெருவளைப் புண்ட வண்ணம்
வடிமலர்க் கோதை யோடும்
  வளைத்தலின் மைந்தன் சீறி
விடுகணை சிலையொ டேந்தி
  வெருவரத் தோன்ற லோடு
மடுபுலி கண்ட மான்போ
  லாறல வாயி னாரே.

   (இ - ள்.) பிடியொடு நின்ற வேழம் பெருவளைப்பு உண்ட வண்ணம் - பிடியுடன் நின்ற களிறு பெரிதும் வளைப்புற்றாற் போல ; வடிமலர்க் கோதையோடும் வளைத்தலின் - தெளிந்த மலர்க்கோதையாள் குணமாலையுடனே மனையிடத்தே வளைப்புறுதலின் ; மைந்தன் சீறி விடுகணை சிலையொடு ஏந்தி - சீவகன் முழங்கி ஆராய்ந்த அம்பையும் வில்லையும் ஏந்தி ; வெருவரத் தோன்றலோடும் - அஞ்சுறுமாறு வெளிப்பட்டபோது ; அடுபுலி கண்ட மான்போல் - கொல்லும் புலியைக் கண்ட மானைப்போல ; ஆறு அல ஆயினார் - வழி தெரியாமல் ஓடினர்

 

   (வி - ம்.) பிடி குணமாலைக்கும் வேழம் சீவகனுக்கும் உவமைகள். வேழம் - ஈண்டு களிறு என்பதுபட நின்றது. புலி சீவகனுக்கும் மான், படைஞர்க்கும் உவமை. ஆறு - வழி. அல : பலவறிசொல். அல்லாத வழிகள் என்னும் பொருட்டு.

( 287 )
1138 சூழ்கழன் மள்ளர் பாறச்
  சூழ்ச்சியிற் றந்தை புல்லி
வீழ்தரு கண்ண டம்மோய்
  விளங்குதோள் பிணிப்ப மற்றென்
றோழரை வடுச்செய் திட்டே
  னென்றுதான் றுளங்கி நின்றா
னூழ்திரைப் பாம்பு சோ்ந்த
  வொளிமிகு பருதி யொத்தான்.

   (இ - ள்.) சூழ்கழல் மள்ளர் பாற - கழலணிந்த மள்ளர்கள் இங்ஙனம் கெடுதலாலே; தந்தை சூழ்ச்சியின் புல்லி - இது பொருளன்றென்றெண்ணித் தந்தை வந்து தழுவ ; வீழ்தரு கண்ணள் தம்மோய் விளங்குதோள் பிணிப்ப - நீர் வீழுங் கண்ணினளாய் நற்றாய் சீவகனது விளங்குந் தோளைக் கட்ட ; மற்று என் தோழரை வடுச் செய்திட்டேன் - இனி என் தோழர்களைப் பழியுறச் செய்தேன்; என்று தான் துளங்கி நின்றான்-