| குணமாலையார் இலம்பகம் |
656 |
|
| 1143 |
மாற்றவர் மலைப்பி னாங்கே |
| |
வாட்கடாக் கொண்டு நொய்தா |
| |
வேற்றுல கேற்றி நும்பின் |
| |
விரைதர்வே னுலகிற் கெல்லா |
| |
மாற்றிய நட்பு வல்லே |
| |
வலிப்புறீஇ யிடுமி னென்றான் |
| |
கூற்றங்கள் பலவுந் தொக்க |
| |
கூற்றத்திற் கூற்ற மொப்பான். |
|
|
(இ - ள்.) கூற்றங்கள் பலவும் தொக்க கூற்றத்தில் கூற்றம் ஒப்பான் - கூற்றுக்கள் பலவுந் திரண்ட கூறுபாட்டிலே சிறந்த கூற்றத்தைப் போன்றவனான பதுமுகன் ; மாற்றவர் மலைப்பின் ஆங்கே வாள் கடாக் கொண்டு - (அவ்வாறு மிளையிற் புகுந்தால்) பகைவர்கள் மலைவதுண்டாயின், வாளாலே கடாவிட்டு; நொய்துஆ வேறு உலகு ஏற்றி நும்பின் விரைதர்வேன் - விரைவாக விண்ணுலகினேற்றி உம்முடன் விரைந்து வருவேன்; ஆற்றிய நட்பு உலகிற்கு எல்லாம் வலிப்பு உறீஇ இடுமின் என்றான் - நீங்கள் நடத்திய நட்பை உலகெல்லாம் நிலைபெறுத்தியிடுமின் என்றான்.
|
|
|
(வி - ம்.) 'கூற்றத்தில் உவமை கூறுமிடத்துப் பல கூற்றங்களாலே பண்ணினதொரு கூற்றம் ஒப்பான்' என்றுமாம்.
|
|
|
கடாக்கொள்ளுதலாவது எருதுகளால் வைக்கோலைத் துவைத்தல் போன்று பகைவரைப் போர்க்களத்தே துவைத்தழித்தல் என்க.
|
|
| |
”கடாவிடு களிறுபோல உச்சியும் |
|
| |
மருங்கும்பற்றிப் பிளந்துயிர் பருகி”. |
|
|
என்பர் பின்னும் (1153) . விரைதருவேன் என்பது விரைதர்வேன் என உகரம் கெட்டுநின்றது.
|
( 293 ) |
| 1144 |
காலனைச் சூழந்த நோய்போ னபுலமா விபுலர் சூழ |
| |
வேலினை யேந்தி நந்தன் வெருவரத் தோன்ற லோடு |
| |
மாலைதன் றாதை தானு மக்களும் வந்து கூடிப் |
| |
பாலவர் பிறரு மீண்டிப் பாய்புலி யினத்திற் சூழ்ந்தார். |
|
|
(இ - ள்.) காலனைச் சூழ்ந்த நோய்போல் நபுலமா விபுலர் சூழ - காலன் ஏவினவாறு செய்ய அவனைச் சூழ்ந்த நோய்போல நபுலனும் விபுலனும் ; மாவின் மேற்சூழ ; நந்தன் வேலினை ஏந்தி - நந்தட்டன் வேலேந்தியவனாய் வெருவரத் தோன்றலோடும் - அச்சமுண்டாகத் தோன்றின அளவிலே ; மாலை தன் தாதை தானும் மக்களும் வந்து கூடி - குணமாலையின் தந்தையும்
|
|