பக்கம் எண் :

                     
குணமாலையார் இலம்பகம் 658 

1146 பிணையலு நறிய சோ்த்திப்
  பெருவிலை யாரந் தாங்கித்
துணைவனுக் குற்ற துன்பஞ்
  சொல்லிய தொடங்கி னாளே.

   (இ - ள்.) கணைபுரை கண்ணி - அம்பனைய கண்ணாள் ; மணி இயல் பவளச் செப்பின் மங்கலத் துகிலை வாங்கி - மணிகளாற் செய்யப்பட்ட யவனச் செப்பிலிருந்து தூய ஆடையை எடுத்து ; ஏற்ப உடுத்தபின் - (வழிபாட்டுக்குத்) தக்கவாறு உடுத்த பிறகு; செம்பொன் செப்பில் நறிய பிணையலும் சேர்த்தி - செம்பொன் செப்பிலிருந்து நல்ல மலர் மாலையையும் அணிந்து ; பெருவிலை ஆரம் தாங்கி - மிகுவிலை பெற்ற முத்து மாலை சூடி ; துணைவனுக்கு உற்ற துன்பம் சொல்லிய - கணவனுக்கு நேர்ந்த துன்பத்தை நீக்குதற்கு; தொடங்கினாள் - வழி படத் தொடங்கினாள்.

 

   (வி - ம்.) சொல்லிய தொடங்கினாள் என்புழிச் செர்ல்லிய என்பது நீக்க என்னும் பொருட்டு.

 
  ”பண்டைச் சாகாட் டாழ்ச்சி சொல்லிய” (புறநா- 90-7)  

   என்புழியும் அஃதப்பொருட்டாதல் அறிக.

( 296 )
1147 பொன்னணி மணிசெ யோடை
  நீரின்வெண் சாந்து பூசித்
தன்னுடை விஞ்ஞை யெல்லாந்
  தளிரிய லோத லோடு
மின்னடு வாளும் வேலுங்
  கல்லொடு தீயுங் காற்று
மன்னுட னேந்தித் தெய்வ
  மாதரைச் சூழ்ந்த வன்றே.

   (இ - ள்.) பொன் அணி மணிசெய் ஓடை வெண்சாந்து - பொன்னாற் செய்து மணியிழைக்கப்பட்ட மடலிலிருந்த வெண்சாந்தை ; நீரின் பூசி - பனிநீருடனே கலந்து பூசிக்கொண்டு; தன் உடை விஞ்சை எல்லாம் - தான் கற்ற மறை யெல்லாவற்றையும் ; தளிர் இயல் ஓதலோடும் - தளிரனையாள் ஓதின அளவிலே; மின் அடு வாளும் வேலும் கல்லொடு தீயும் காற்றும் - மின்னை வென்ற ஒளியுறு வாள், வேல், கல், தீ, காற்று ஆகியவற்றை மன் உடன் ஏந்தி - மிகுதியாகத் தம்முடன் ஏந்தி ; மாதரைத் தெய்வம் சூழ்ந்த - தத்தையைத் தெய்வங்கள் சூழ்ந்தன.