| குணமாலையார் இலம்பகம் |
659 |
|
|
(வி - ம்.) இதனானும், பின், 'விண்ணோர்களை வாழ்த்தி' (சீவக. 1160) என்றதனானும் ஈண்டு விஞ்சையர் வாராமை யுணர்க. 'சாந்து பூத்த' என்றும், 'தன்னிடை விஞ்சை' என்றும் பாடம்.
|
( 297 ) |
வேறு
|
|
| 1148 |
ஆரமின் னும்பணை வெம்முலை யாடமைத் தோளினாள் |
| |
வீரனுற் றதுயர் மின்னென நீக்கிய மெல்லவே |
| |
நேரமன் னும்வரு கென்றுநின் றாணினைந் தாளரோ |
| |
பாருண்மன் னும்பழி பண்பனுக் கின்று விளைந்ததே. |
|
|
(இ - ள்.) ஆரம் மின்னும் பணை வெம்முலை ஆடு அமைத் தோளினாள் - முத்துவடம் ஒளிரும் பருத்த வெம்முலைகளையும் அசையும் மூங்கிலனைய தோள்களையும் உடைய தத்தை ; வீரன் உற்ற துயர் மின் என நீக்கிய - தன் கணவன் அடைந்த துயரை மின்போலக் கடிது நீக்க ; மன்னும் நேர வருக என்று நின்றாள் - மிகவும் அணுக வருக என்று தெய்வங்களை வேண்டி நின்றவள்; பாருள் மன்னும் பழி பண்பனுக்கு இன்று விளைந்தது - உலகில் நிலைபெறும் வடுச்சொல் தன் கணவனுக்கு இன்று நேர்ந்ததை; மெல்ல நினைந்தாள் - மெல்லென எண்ணினாள்.
|
|
|
(வி - ம்.) நினைந்தது மேற்கூறுகின்றார்.
|
|
|
ஆரம் - முத்துவடம். பணைவெம்முலை: வினைத்தொகை. தோளினாள் : காந்தருவதத்தை . வீரன் : சீவகன். மின்-ஈண்டு விரைவின் மறைதற்குவமை. மன்னும் - மிகவும். அரோ : அசை. மன்னும்பழி - நிலையுறும்பழி. பண்பன் : சீவகன்; நற்குணம் நிறைந்தவன் என்பது கருத்து.
|
( 298 ) |
| 1149 |
மன்னன்செய் தசிறை மாகட லுட்குளித் தாழ்வுழித் |
| |
தன்னையெய் திச்சிறை மீட்டன டன்மனை யாளெனி |
| |
னென்னையா வதிவ னாற்றலுங் கல்வியு மென்றுடன் |
| |
கொன்னும்வை யங்கொழிக் கும்பழிக் கென்செய்கோ |
|
|
(இ - ள்.) மன்னன் செய்த சிறை மாகடலுள் குளித்து ஆழ்வுழி - அரசன் செய்த சிறைப் பெருங்கடலிலே முழுகி அழுந்தும்போது ; தன் மனையாள் தன்னை எய்திச் சிறை மீட்டனள் எனின் - தன் மனைவி தன்னைச் சேர்ந்து சிறையை நீக்கினாள் என்றால் ; இவன் ஆற்றலும் கல்வியும் என் ஆவது என்று - இவன் வலிமையும் படிப்பும் என்னாகத் தகுவன என்று ; உடன் கொன்னும் வையம் கொழிக்கும் பழிக்கு - சிறை நீக்கினவுடன்! பெரிதும் உலகம் எடுத்துச் சொல்லும் பழிக்கு ; தெய்வமே என் செய்கோ ?- தெய்வமே! நான் என்ன செய்வேன்?
|
|