| குணமாலையார் இலம்பகம் |
660 |
|
|
(வி - ம்.) என்னை : ஐ : அசை. ஆவது : ஒருமைப் பன்மை மயக்கம்.
|
|
|
இச் செய்யுள்,
|
|
| |
”அல்லன் மாக்கள் இலங்கைய தாகுமோ |
|
| |
எல்லை நீத்த உலகங்கள் யாவுமென் |
|
| |
சொல்லி னாற்சுடு வேனது தூயவன் |
|
| |
வில்லி னாற்றற்கு மாசென்று வீசினேன்” (கம்ப- சூளாம- 18) |
|
|
என்னும் சீதையின் கூற்றை நினைப்பிக்கின்றது.
|
( 299 ) |
| 1150 |
செல்வனுற் றசிறை செய்யவ ணீக்குமென் றாற்பழி |
| |
யில்லையா யின்னவள் யானெனும் வேற்றுமை யில்லையே |
| |
சொல்லின்வெள் ளிம்மலை தோடவிழ் தாமரைப் பொன்மல |
| |
ரெல்லையா கும்பொதுப் பெண்ணவள் யான்குல மங்கையே. |
|
|
(இ - ள்.) செல்வன் உற்ற சிறை செய்யவள் நீக்கும் என்றால் - செல்வன் அடைந்த சிறையைத் திருமகள் நீக்குவாளாயின்; பழி இல்லை ஆயின் - பழியில்லை யென்றால் ; அவள் யான் எனும் வேற்றுமை இல்லையே - அவளென்றும் யானென்றும் வேறுபாடு இல்லையே, சொல்லின் - வேற்றுமை கூறின் வெள்ளிமலை தோடு அவிழ் பொன் தாமரை மலர் எல்லை ஆகும் - எனக்கு வெள்ளிமலையும் அவளுக்கு இதழ்விரிந்த பொற்றாமரை மலரும் எல்லை ஆகும் ; அவள் பொதுப்பெண் - (மற்றும்) அவளோ பொதுமகள் ; யான் குலமங்கை - யானோ குலப்பெண். (ஆகையாற் பழியில்லையாம்).
|
|
|
(வி - ம்.) திருமகள் பார்க்கின் தீங்கு நீங்கும் என்று உலகங் கூறுதலின் இங்ஙனங் கூறினாள்.
|
|
|
செல்வன், ஈண்டுச் சீவகன். செய்யவள் - திருமகள். திருமகள் பலரிடத்தும் கைம்மாறிப் போதலின் பொதுமகள் எனப்பட்டாள். எனவே குலமகளாகிய யான் அவன் சிறை நீக்குதல் பழியாகாது எனத் துணிந்தவாறாயிற்று.
|
( 300 ) |
| 1151 |
ஆவதா கபுக ழும்புழி யும்மெழு நாளவை |
| |
தேவர்மாட் டும்முள மக்களு ளில்வழித் தோ்கலே |
| |
னோமெனெஞ் சம்மென நோக்கிநின் றாள்சிறைப் பட்டதன் |
| |
காவற்கன் றிற்புனிற் றாவன கார்மயிற் சாயலே. |
|
|
(இ - ள்.) புகழும் பழியும் ஆவதாக - (மேலும்) ஈண்டுப் புகழும் பழியும் ஆவதாகுக; அவை எழும் நாள் தேவர்மாட்டும் உள - அவை தோன்றும்போது விண்ணவரிடத்தும் தோன்றுகின்றன ; மக்களுள் இல்வழித் தேர்கலேன் - மக்களிடம் அவை இல்லாத இடத்தைக் கண்டறியேன் ; என் நெஞ்சம் நோம்-
|
|