| குணமாலையார் இலம்பகம் |
661 |
|
|
இவற்றை யெல்லாம் எண்ணின் உள்ளம் வருந்தும், (நினைக்குங் காலமும் அன்று); என - என்றுரைத்து; சிறைப்பட்ட தன் காவல் கன்றின் - ஒரு சிறையிலகப்பட்ட தன் காப்பில் உள்ள கன்றினிடம்; புனிற்று ஆ அன - இளங்கன்றின் தாயான பசு நோக்கல் போல ; கார் மயில் சாயல் - கார்நோக்கும் மயிலின் மென்மையாள் ; நோக்கி நின்றாள் - பார்த்து நின்றாள்.
|
|
|
(வி - ம்.) ஆ விடுவிக்க நோக்கி நின்றாற்போல நின்றாள்.
|
( 301 ) |
வேறு
|
|
| 1152 |
மாநகர் சுடுத லொன்றோ |
| |
மதனனை யழித்த லொன்றோ |
| |
வானிக ரில்லா மைந்தர் |
| |
கருதிய ததுவு நிற்க |
| |
வேய்நிக ரில்ல தோளி |
| |
விஞ்சையால் விடுத்துக்கொள்ளப் |
| |
போயுயிர் வாழ்தல் வேண்டே |
| |
னெனப்பொருள் சிந்திக் கின்றான். |
|
|
(இ - ள்.) வான்நிகர் இல்லா மைந்தர் - வானும் நிகர் இல்லாத நம் தோழர்கள்; மாநகர் சுடுதல் ஒன்றோ, மதனனை அழித்தல் ஒன்றோ கருதியது - பெரிய நகரைச் சுடுதலாவது , மதனனைக் கொல்வதாவது நினைத்தாகும்; அதுவும் நிற்க - அதுவும் குறைவில்லை; வேய்நிகர் இல்ல தோளி - மூங்கில் ஒவ்வாத தோளி ; விஞ்சையால் விடுத்துக்கொள்ள - தன் விஞ்சைத் திறத்தால் விடுவித்துக் கொள்ள; போய் உயிர் வாழ்தல் வேண்டேன் - பிழைத்துச் சென்று உயிர் வாழ்தலை விரும்பேன்; எனப் பொருள் சிந்திக்கின்றான்-என்று கருதி மேலே செய்யவேண்டிய பொருளை நினைக்கின்றான்.
|
|
|
(வி - ம்.) 'ஆய்நிகர்' என்றும் பாடம்.
|
|
|
மாநகர் - அரண்மனையுமாம். வான் - முகில் : இது கைம்மாறு வேண்டாது நன்மை செய்தற்குவமை. இனி வான் - தேவருலகமுமாம். இது தன்பாலுற்றார் துன்பம் துவரத்துடைத்து இன்பமெலாந் தடையின்றித் தருதற்குவமை என்க. மைந்தர் என்றது தோழரை. தோளி - ஈண்டுக் காந்தருவத்தை. பொருள் - இனிச் செய்யக்கடவதாகிய செயல்.
|
( 302 ) |
| 1153 |
கச்சற நிமிர்ந்து மாந்தர்க் கடாவிடு களிறு போல |
| |
வுச்சியு மருங்கும் பற்றிப் பிளந்துயிர் பருகிக் கோண்மா |
| |
வச்சுற வழன்று சீறி யாட்டினம் புக்க தொப்பக் |
| |
குச்சென நிரைத்த யானைக் குழாமிரித் திடுவ லென்றான். |
|