| குணமாலையார் இலம்பகம் |
663 |
|
| 1155 |
தோழனுந் தேவி மார்தங் குழாத்துளான் றுளும்பு முந்நீ |
| |
ரேழ்தரு பருதி தன்மே லிளம்பிறை கிடந்த தேபோற் |
| |
றாழ்தகை யார மார்பிற் சீவகன் குணங்க டம்மை |
| |
யாழெழீஇப் பாடக் கேட்டோ ரரம்பையைச் சோ்ந்திருந்தான். |
|
|
(இ - ள்.) தோழனும் தேவிமார்தம் குழாத்துளான் - சுதஞ்சணனும் தன் மனைவியரின் குழாத்திலே யிருப்பவன் ; துளும்பும் முந்நீர் ஏழ்தரு பருதி தன்மேல் இளம்பிறை கிடந்ததே போல் - அலைதலையுடைய கடலில் எழுதரும் இளங்கதிரின் மேல் இளம்பிறை கிடந்தாற் போல ; தாழ்தகை ஆரம் மார்பின்-தங்கின முத்தார மார்பினையுடைய; சீவகன் குணங்கள் தம்மை - சீவகனின் பண்புகளை ; ஓர் அரம்பையைச் சார்ந்து - அரம்பை யொருத்தியைக் கொண்டு ; யாழ் எழீஇப் பாடக் கேட்டிருந்தான் - யாழிசைத்துப் பாடக் கேட்டிருந்தான்.
|
|
|
(வி - ம்.) ஏழ்தரு : எழுதரு என்பதன் விகாரம்.
|
|
|
ஏழ்தரும் - எழுதரும்; தோன்றாநின்ற. பருதி - ஞாயிறு ; இது மார்பினுக்குவமை. பிறை - முத்தாரத்திற்குவமை. தோழனும் அவ்வமயம் பாடக்கேட்டு இருந்தான் என்க.
|
( 305 ) |
வேறு
|
|
| 1156 |
வயிரம் வேய்ந்த மணிநீண்முடி வாலொளி வானவன் |
| |
செயிரிற் றீர்ந்த செழுந்தாமரைக் கண்ணிட னாடலு |
| |
முயிரனா னைநினைந் தானுற்ற தோதியி னோக்கினான் |
| |
மயிலனார்க் குப்படி வைத்தவன் மால்விசும் பேறினான். |
|
|
(இ - ள்.) வயிரம் வேய்ந்த நீள் மணிமுடி - வயிரம் பதித்த நீண்ட மணிமுடியினையும்; வால் ஒளி - வெள்ளிய நிறத்தினையும் உடைய; வானவன் - சுதஞ்சணனது ; செயிரின் தீர்ந்த செழுந்தாமரைக் கண் - குற்றத்தினின்றும் நீங்கிய வளமிகு தாமரைக் கண்களில்; இடன் ஆடலும் - இடக்கண் ஆடின அளவிலே; உயிர் அனானை நினைந்தான் - (தனக்குத் தீங்குறுமோ என்று நினையாமல்) உயிரனைய சீவகனை எண்ணினான் ; உற்றது ஓதியின் நோக்கினான் - நேர்ந்ததை மனவுணர்வாலே அறிந்தான் ; மயிலனார்க்குப் படிவைத்து - மயிலனைய மனைவியர்க்குத் தன் உருவைப் புனைந்து வைத்து ; அவன் மால் விசும்பு ஏறினான் - தன் ஊர்தியாகிய பெரிய முகிலின்மிசை அமர்ந்தான்.
|
|
|
(வி - ம்.) தான் இருந்த அவை குலைவுறாமற் படிவம் வைத்தான். படி: படிவம் என்பதன் விகாரம்.
|
( 306 ) |