குணமாலையார் இலம்பகம் |
668 |
|
(இ - ள்.) காய்சின வெகுளி வேந்தே! - சுடுகின்ற சீற்றமுடைய அரசே!; களிற்றொடும் பொருத காளை - நம் பட்டக் களிற்றுடன் போர் செய்த சீவகனுடைய; மாசனம் பெரிதும் மொய்த்து - பெருஞ் சுற்றத்தார் நெருங்கி மொய்ப்ப; மழையினோடு இருளும் காற்றும் - மழையும் இருளும் காற்றுமாக; பேசின் பெரிதும் தோன்ற - கூறுமிடத்து மிக்குத் தோன்றின அளவிலே; பிழைத்து உய்யப் போதல் அஞ்சி - எங்களிடமிருந்து தப்பி அவன் உய்ந்து போதற்கு அஞ்சி; வாசம்கொள் தாரினானை - மணங்கமழ் மாலையுடைய அவனை; மார்பு போழ்ந்து உருட்டியிட்டேம் - மார்பைப் பிளந்து தள்ளி விட்டோம்.
|
|
(வி - ம்.) அரசனிடம் சென்று இங்ஙனம் மதனன் முதலியோர் கூறினர் என்று கொள்க.
|
|
காய்சினம் : வினைத்தொகை. காளை : சீவகன் . மாசனம் - பெரிய மாந்தர் கூட்டம், என்றது சீவகன் சுற்றத்தாரை. மொய்த்து - மொய்ப்ப. பேசிற்றான் என்புழி, தான் அசை. தாரினானை: சீவகனை.
|
( 314 ) |
1165 |
அருள்வலி யாண்மைகல்வி யழகறி விளமை யூக்கந் |
|
திருமலி யீகை போகந் திண்புகழ் நிண்பு சுற்ற |
|
மொருவரிவ் வுலகில் யாரே சீவக னொக்கு நீரார் |
|
பெரிதரி திவனைக் கொன்றாய் பெறுகெனச் சிறப்புச் செய்தான். |
|
(இ - ள்.) அருள் வலி ஆண்மை கல்வி அழகு அறிவு இளமை ஊக்கம் திருமலி ஈகை போகம் திண்புகழ் நண்பு சுற்றம் - அருளும் மெய்வலியும் ஆளுந்தன்மையும் கல்வியும் அழகும் இயற்கை அறிவும் இளமையும் முயற்சியும் செல்வம் மிகுங் கொடையும் எல்லாவற்றையும் நுகரும் பேறும் திண்ணிய புகழும் நட்பும் உறவும் ஆகியவற்றில்; இவ்வுலகிற் சீவகன் ஒக்கும் நீரார் ஒருவர் யாரே?- இவ்வுலகிலே சீவகனைப் போன்றவர் ஒருவருமிலர் ; பெரிது அரிது இவனைக் கொன்றாய் - பெரிதும் அரியதாக இவனைக் கொன்றனை; பெறுக எனச் சிறப்புச் செய்தான் - நீ இவற்றைப் பெற்றுக் கொள்க என்று மதனனுக்குச் சிறப்புப் பல செய்தனன்.
|
|
(வி - ம்.) யாரே : ஏ : எதிர்மறை இடைச்சொல்.
|
|
திருமலிதற்குக் காரணமான ஈகை என்க. போகம் - ஈண்டுக் காம நுகர்ச்சி. உலகுள்ள காலமெல்லாம் நிலையுதலின் திண்புகழ் என்றான். நீரார் - தன்மையுடையோர். இதனால் கட்டியங்காரன் சீவகன்பால் அழுக்காறுடையனாதற்குரிய காரணங்கள் தொகுத்துக் கூறப்பட்டன.
|
( 315 ) |
குணமாலையார் இலம்பகம் முற்றிற்று.
|
|