நாமகள் இலம்பகம் |
67 |
|
112 |
இட்டநூல் வழாமை யோடி யோசனை யெல்லை நீண்டு |
|
மட்டுவார் மாலை வேய்ந்து சதுக்கங்கண் மலிந்த சும்மைப் |
|
பட்டமும் பசும்பொற் பூணும் பரந்தொளி நிழற்றுந் தீந்தே |
|
னட்டுந்தா ரணிந்த மார்ப ராவணங் கிளக்க லுற்றேன். |
|
(இ - ள்.) இட்டநூல் வழாமை ஓடி - பிடித்த நூலின் ஒழுங்கு தவறாமல் கிடந்து; யோசனை எல்லை நீண்டு - யோசனை அளவு நீண்டு; மட்டுவார் மாலை வேய்ந்து - தேன்சொரியும் மாலைகள் வேயப்பட்டு; சதுக்கங்கள் மலிந்த சும்மை - நாற்சந்திகளிலே மிக்க ஒலியினை உடைய; பட்டமும் பசும்பொன் பூணும் பரந்து ஒளிநிழற்றும் தீந்தேன் அட்டும் தார் அணிந்த மார்பர் - தம் தரத்திற்குத் தகப் பட்டமும் புதிய பொற்கலனும் எங்கும் பரவி ஒளி செய்தற்குக் காரணமான; இனிய தேன்சொரியும் (முல்லை) மாலையும் அணிந்த மார்பரான வணிகர் முதலாயினோர் வாழும்; ஆவணம் கிளக்கல் உற்றேன் - அங்காடித் தெருவைக் கூறத்தொடங்கினேன்.
|
|
(வி - ம்.) பண்டைக்காலத்தே நகரங்களில் தெருக்களை நூல் பிடித்து ஒழுங்குற அமைக்கும் வழக்கமுண்மை உணர்க. ஆவணம் - அங்காடி; கடைத்தெரு.
|
( 83 ) |
113 |
மணிபுனை செம்பொற் கொட்டை வம்பணி முத்த மாலைக் |
|
கணிபுனை பவழத் திண்காழ் கம்பலக் கிடுகி னூன்றி |
|
யணிநில மெழுகிச் சாந்தி னகில்புகைத் தம்பொற் போதிற் |
|
றிணிநில மணிந்து தேங்கொ ளையவி சிதறி னாரே. |
|
(இ - ள்.) மணிபுனை செம்பொன் கொட்டை வம்புஅணி கணிபுனை பவழம் திண்காழ் - மணி அழுத்தின் செம்பொன்னாற் செய்யப்பட்ட கடைமணியை உடைய, கச்சுத் தூக்கின, நூலறிந்த கணிபுனைந்த திண்ணிய பவழக்காம்பை; முத்தமாலைக் கம்பலக் கிடுகின் ஊன்றி - முத்துமாலை புனைந்த கம்பலம் வேய்ந்த சட்டத்திலே பொருந்தி ஊன்றி; அணிநிலம் சாந்தின் மெழுகி - அழகிய இடத்தைச் சாந்தினாலே மெழுகி; அகில் புகைத்து - அகிற்புகை ஊட்டி , திணிநிலம் அம்பொன் போதின் அணிந்து - கற்படுத்த நிலத்தைப் பொன்மலரால் அணிந்து; தேம்கொள் ஐயவி சிதறினார் - தெய்வம் இனிதாகக் கொண்ட வெண்சிறு கடுகைத் தூவினர்.
|
|
(வி - ம்.) கணி - நூல் தேர்ந்தவன். அவன் புனைந்த காழ். திணி நிலம்- உறுதி செய்த நிலம், தேம்கொள் ஐயவி - தெய்வங்கள் இனிதாகக் கொண்ட வெண்சிறு கடுகு.
|
|
வம்பு - கச்சு. கொட்டை- உருண்டை வடிவமானது. காழ் - காம்பு. கிடுகு - சட்டம். முத்தமாலை புனைந்த கிடுகு எனக் கூட்டுக.
|
( 84 ) |