பக்கம் எண் :

பதுமையார் இலம்பகம் 673 

   (வி - ம்.) பொன் அணி காம்பு செய்த பொழிகதிர்த் திங்கள்: இல் பொருளுவமை.

   சல்லி பின்னிய முத்துமாலை எனக் கொள்க. பிணையல் - ஈண்டுத் தூங்கவிடப் பட்ட முத்தமாலை. இன்னிசைக்கூத்து - இனிய இசையோடு கூடிய கூத்து. திலகமன்னான் : சீவகன்.

( 5 )
1171இருமலர்க் குவளை யுண்க ணிமைப்பிலாப் பயத்தைப் பெற்ற
வரிமலர்த் தாரி னான்ற னழகுகண் டளிய வென்னாத்
திருமலர்க் கோதை யைம்பாற் றேவியர் தொடர்பு கேட்ப
வெரிமணிப் பூணி னானு மின்னண மியம்பி னானே.

   (இ - ள்.) திருமலர்க் கோதை ஐம் பால் தேவியர் - அழகிய மலர்மாலை அணிந்த கூந்தலையுடைய மனைவியர்; இரு மலர்க் குவளை உண்கண் - கரிய குவளை மலரனைய எம் மைதீட்டிய கண்கள்; அரி மலர்த்தாரினான் தன் அழகு கண்டு - வண்டுகள் மொய்க்கும் மலர்மாலையினானுடைய அழகினைக் கண்டு; இமைப்பு இலாப் பயத்தைப் பெற்ற . - (இதுவரை) இமையாமல் இருந்த பயனைப் பெற்றன; அளிய என்னா - அளிக்கத் தக்கன என்று முகமன் உரைத்து; தொடர்பு கேட்ப - எங்ஙனம் நட்புண்டாயதென்று வினவ; எரி மணிப் பூணினானும் இன்னணம் இயம்பினான் - ஒளி விடும் மணிக்கலன்கள் அணிந்த சுதஞ்சணனும் இவ்வாறு கூறினான்.

   (வி - ம்.) இருமை. கருமை - நாய்ப் பிறப்பை மறையாமற் கூறலின் 'இன்னணம்' என்றார்.

   இருங்குவளைமலர் போன்ற உண்கண் என்க. வித்தியாதரர் ஆகலின் கண்ணிமையாதிருந்தன. இதுகாறும் அவை வாளா இமையாதிருந்தன. இமையாமல் நோக்கி மகிழ்தற்குரிய இவன் அழகினை அவை இப்பொழுது இடையறாது நுகர்தலின் இமையாமையின் பயனையும் இப்பொழுது எய்தின என்றவாறு. தொடர்பு - நட்பு. பூணினான் : சுதஞ்சணன்.

( 6 )

வேறு

1172 பிணிக்குலத் தகவயிற் பிறந்த நோய்கெடுத்
தணித்தகை யுடம்பெனக் கருளி நோக்கினான்
கணிப்பருங் குணத்தொகைக் காளை யென்றனன்
மணிக்கலத் தகத்தமிர் தனைய மாண்பினான்.

   (இ - ள்.) மணிக் கலத்து அகத்து அமிர்து அனைய மாண்பினான் - மாணிக்கக் கலத்தில் ஏந்திய அமிர்தம் போன்ற தகவினானான சுதஞ்சணன்; கணிப்பு அருங்குணத் தொகைக் காளை - அளவிடற்கரிய பண்பினையுடைய சீவகன்; பிணிக் குலத்து அகவை