பதுமையார் இலம்பகம் |
674 |
|
யின் பிறந்த நோய் கெடுத்து - (நான்) நோய்த் திரளையுடைய விலங்குத் தொகுதியின் அகத்திலே பிறந்த நோயை நீக்கி; அணித்தகை உடம்பு எனக்கு அருளி நோக்கினான் என்றனன் - அழகினைத் தன்னிடத்தே அடக்கிய தெய்வ வுடம்பை எனக்கு நல்கி இந்நிலையிலேயே பார்த்தான் என்றனன்.
|
(வி - ம்.) பிணிக்குலம் - நோய்த்திரள்; எனவே, விலங்காயிற்று. அந் நோய்க் கெல்லாம் அகம் என்றது நாயை; 'எரிநீரவே நரகம் அந்நரகத் துன்பத் - தொருநீரவே விலங்கு தாமுடைய துன்பம்' (சீவக. 2777) என்பர் மேலும். மணிக்கலத்து அமிர்தென்றார், வடிவிற்குத் தக்க கலங்காத குணம் உண்டாதலின்.
|
( 7 ) |
1173 |
கடற்சுற வுயரிய காளை யன்னவ |
|
னடற்கரும் பகைகெடுத் தகன்ற நீணில |
|
மடத்தகை யவளொடும் வதுவை நாட்டிநாங் |
|
கொடுக்குவ மெனத்தெய்வ மகளிர் கூறினார். |
|
(இ - ள்.) கடல் சுறவு உயரிய காளை அன்னவன் - கடலில் வாழும் சுறாமீனைக் கொடியிற்கொண்ட காமனைப் போன்றவனுக்குற்ற; அடற்கு அரும்பகை கெடுத்து - வெல்லுதற்கரிய பகையைக் கெடுத்து; அகன்ற நீள் நிலம் மடத் தகையவளொடும் வதுவை நாட்டி - பரப்புடைய பெருநிலமாகிய மங்கையை மணம் புரிவித்து; நாம் கொடுக்குவம் என - நாம் கொடுப்போம் என்று; தெய்வ மகளிர் கூறினார் - அவன் மனைவியராகிய தெய்வ மடந்தையர் செப்பினர்.
|
(வி - ம்.) மடத்தகையவளொடும் : ஒடு : இரண்டன் பொருளில் மூன்றன் உருபு வந்ததால் உருபு மயக்கம். உம் : அசை; நிலமகளொடு திருமகளும் என எச்சவும்மையுமாம்.
|
( 8 ) |
1174 |
செருநிலத் தவனுயிர் செகுத்து மற்றெனக் |
|
கிருநில மியைவதற் கெண்ணல் வேண்டுமோ |
|
திருநிலக் கிழமையுந் தேவர் தேயமுந் |
|
தருநிலத் தெமக்கெனிற் றருகுந் தன்மையீர். |
|
(இ - ள்.) திருநிலக் கிழமையும் தேவர் தேயமும் நிலத்து எமக்குத் தாரும் எனின் - இன்ப நிலத்துரிமையையும் வானவர் உலகையும் இந்நிலத்தே எமக்குத் தாரும் என்றால்; தருகும் தன்மையீர்! - கொடுக்கும் இயல்புடையீர்!, செருநிலத்து அவன் உயிர் செகுத்து - போர்க் களத்திலே என் எதிரியின் உயிரைப் போக்கி; எனக்கு இரு நிலம் இயைவதற்கு எண்ணல் வேண்டுமோ? - எனக்குப் பெருநிலம் பொருந்துமாறு செய்யச் சிந்தனை செய்யவும் வேண்டுமோ?
|