பக்கம் எண் :

பதுமையார் இலம்பகம் 677 

வேறு

1179 அங்குநின் றகன்றபி னையைங் காவதம்.
வெங்களி விடுமத வேழப் பேரினந்
தங்கிய காடது தனிச்செல் வாரிலை
கங்கையின் கரையது கடலிற் றோன்றுமே.

   (இ - ள்.) அங்கு நின்று அகன்ற பின் - அங்கிருந்து சென்ற பின்பு; ஐ ஐங்காவதம் வெம்களி விடும் மதவேழப் பேரினம் தங்கிய காடு - இருபத்தைங்காதவழி வெவ்விய களிப்பினாலே சொரியும் மதமுடைய களிற்றுப் பெருந்திரள் தங்கிய காடு உளது; கங்கையின் கரையது கடலின் தோன்றும் - கங்கையின் கரையிலுள்ளதாகிய அது கடல்போலத் தோன்றும்; அது தனிச் செல்வார் இலை - அக் காட்டிலே தனியே செல்பவர் இலர்.

   (வி - ம்.) அக் காட்டிலே சிறப்பாக யானைத் திரளை மட்டுமே கூறினான் சீவகன் அறஞ் செய்தலை நோக்கி; 'பஞ்சவர் போல நின்ற பகட்டினப் பரிவு தீர்த்தான்' (சீவக. 1237) என்பர் பின்னர். 'கடல்போல் தோன்றல காடு இறந்தோரே' (அகநா. 1-19) என்றார் பிறரும்.

( 14 )
1180 புனலெரி தவழ்ந்தெனப் பூத்த தாமரை.
வனமது வாளென வாளை பாய்வன
மனமகிழ் பெருந்தடம் வலத்திட் டேகுதி
யினமலர்த் தாரினா யிரண்டு காதமே

   (இ - ள்.) இனம் மலர்த்தாரினாய் - இன மலர்களால் ஆன மாலையினை உடையாய்!; புனல் எரி தவழ்ந்தெனப் பூத்த தாமரை - நீரிலே எரிதவழ்ந்தாற்போல மலர்ந்த தாமரையை உடையவும்; வாள்என வாளை பாய்வன - வாள்போல வாளைகள் பாய்வனவும் ஆன; மனம் மகிழ் பெருந்தடம் - உள்ளக்களிப்பையூட்டும் பெரிய பொய்கைகளை; வலத்து இட்டு - வலப்பக்கத்தே விடுத்து; வனமது இரண்டு காவதம் ஏகுதி - அக்காட்டிலே இரு காவதம் செல்வாயாக.

   (வி - ம்.) எனவே அக்காட்டின்கண் வாளைபாயும் தாமரைப் பெருந்தடம் உண்மையும் கூறினனாயிற்று. வேற்று நாட்டதன் சுவையே விரும்பிப்போதலின், தாமரைத் தடத்தெழிலை விதந்தோதினான்.

( 15 )
1181 காந்திய மணியொடு வயிரம் பொன்கலந்
தேந்தனின் றோளென விரண்டு குன்றுபோய்ப்
பூந்துகின் மகளிரிற் பொலிந்து போர்த்ததோர்
பேந்தரு பேய்வனம் பெரிய காண்டியே./span>