பதுமையார் இலம்பகம் |
679 |
|
வின் - பழங்குழைந்தாற் போன்ற மேனி மெலிவுடன்; பையென முறுகி ஊர்தர - மெல்ல மிகவும் அருகில் நெருங்கினவுடனே; தழும்பதம் இது எனச் சார்ந்து புல்லலும் - தழுவும் காலம் இது என எண்ணித் தழுவியவுடனே; பிழிந்து உயிர் உண்டிடும் பேய்கள் ஆப - உயிரைப் பிழிந்து பருகும் பேய்களாய் விடுவர். (ஆகையால், அப் பேய் மகளிரைத் தழுவற்க.)
|
(வி - ம்.) முறுகி என்றற்கு மிக்கு எனப் பொருள் கூறினார் நச்சினார்க்கினியர்; வேட்கையின் முறுகி என இயைத்து முதிர்ந்து எனலுமாம். தழுவும்; தழும் என ஈற்றுயிர் மெய்கெட்டு நின்றது. செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சமாகலின்.
|
( 18 ) |
வேறு
|
1184 |
கண்டபேய் நகரி னீங்கிக் காவதங் கடந்து தோன்றும் |
|
வெண்டலைப் புணரி வீசிக் கிடந்தபொற் றீவிற் றாகிக் |
|
கொண்டுலப் பரிய செந்நெல் கொடிக்கரும் புடுத்த வேலி |
|
நுண்டுகி னுழைந்த வல்குற் பவளமொத் தினியதொன்றே. |
|
(இ - ள்.) கண்ட பேய் நகரின் நீக்கிக் காவதம் கடந்து - காணப்பட்ட அப் பேய் நகரினின்றும் நீங்கிக் காவதம் கடந்த அளவிலே; கொண்டு உலப்ப அரிய செந்நெல் கொடிக் கரும்பு உடுத்த வேலி - அறுத்துத் தொலைத்தற்கரிய செந்நெல்லை, ஒழுங்கினையுடைய கரும்பு சூழ்ந்த வேலி; அல்குல் நுண்துகில் நுழைந்த பவளம் ஒத்து - அல்குலிலே நுண்ணிய துகிலினுள் நுழைந்து கிடந்த பவள மேகலையையும் ஒப்ப; வெண்தலைப் புணரி வீசிக் கிடந்த பொன் தீவிற்று ஆகி - வெண்மையான அலைகளையுடைய கடல் சூழ்ந்த கிடந்த பொற்றீவின் தன்மையுடையதாய்; இனியது ஒன்று தோன்றும் - இனியதொரு நாடு தோன்றும்.
|
(வி - ம்.) கடந்து - கடப்ப : எச்சத்திரிபு. கொடி - ஒழுங்கு.
|
தீவிற்றாகி - தீவின் தன்மைத்தாய் என்க. கொண்டுலப்பரிய என் புழிக்கொண்டு என்பதனைக்கொள எனத் திரிந்துக்கொள்க. தீவிற்றாகி மேலும் அதன்கண் வேலி அல்குற் பவளம் ஒத்தலான் காண்டற்கினியதொன்று என்பது கருத்து.
|
( 19 ) |
1185 |
படுமழை பருவம் பொய்யாப் பல்லவ தேய மென்னுந் |
|
தடமலர்க் குவளைப் பட்டந் தழுவிய யாணர் நன்னாட் |
|
டிடைநெறி யசைவு தீர விருந்தவ ணேக லுற்றாற் |
|
கடநெறி கடத்தற் கின்னாக் கல்லத ரத்த முண்டே. |
|
(இ - ள்.) படுமழை பருவம் பொய்யா - பெய்யும் மழை காலம் தவறாத; பல்லவ தேயம் என்னும் - பல்லவ நாடு என்
|