பதுமையார் இலம்பகம் |
680 |
|
னும் பெயரையுடைய; தடம் மலர்க்குவளைப் பட்டம் தழுவியயாணர் நன்னாட்டு - பெரிய குவளை மலர்களையுடைய குளங்கள் பொருந்திய, புது வருவாயுமுடைய அழகிய நாட்டிலே; இடைநெறி அசைவு தீர இருந்து - வழி வருத்தம் நீங்க ஒரு திங்கள் தங்கி; அவண் ஏகல் உற்றால் - அங்கிருந்து மேற்செல்லத் தொடங்கினால்; கடம் நெறி கடத்தற்கு இன்னாக் கல்அதர் அத்தம் உண்டு - காட்டு வழி கடந்து போதற்குப் பொல்லாததொரு கல்வழி உண்டு.
|
(வி - ம்.) 'பல்லவ தேயத்தில் அசைவு தீர இருந்து' என்றதனாற் பதுமையைக் கொள்ளுதலுங் கூறினானாயிற்று.
|
( 20 ) |
வேறு
|
1186 |
நுதிகொண்டன வெம்பர னுண்ணிலைவேல் |
|
பதிகொண்டு பரந்தன போன்றுளவால் |
|
விதிகண்டவ ரல்லது மீதுசெலார் |
|
வதிகொண்டதொர் வெவ்வழல் வாய்சொலின்வேம். |
|
(இ - ள்.) வதி கொண்டது ஒர் வெவ்வழல் சொலின் வாய்வேம் - அவ்வழி கொண்டதாகிய ஒப்பற்ற கொடிய அனலைக் கூறின் வாயும் வேகும்; நுதி கொண்டன வெம்பரல் - கூர்மைமையைக் கொண்டனவாகிய கொடிய பரல்கள்; நுண் இலை வேல் பதி கொண்டு பரந்தன போன்று உள - நுண்ணிய இலை முகமுடைய வேல்கள் பதித்தல் கொண்டு பரவின போன்றுள்ளன; விதி கண்டவர் அல்லது மீது செலார் - ஊழ்வினை முற்றி இறத்தற்குரியவர் அல்லது மற்றவர் அவ்வழி செலார்.
|
(வி - ம்.) விதியைப் புறங்கண்ட தபோதனர் மேலேயெழப் பறந்து போவதல்லது வேறு போகார் என்றும் உரைக்கலாம் என்பர் நச்சினார்க்கினியர்.
|
( 21 ) |
1187 |
குழவிப்பிடி குஞ்சர மாழ்குமெனத் |
|
தழுவிச்சுடு வெவ்வழ றாங்குவன |
|
கெழுவிப்பெடை யைக்கிளர் சேவறழீஇத் |
|
தொழுதிச்சிற கிற்றுய ராற்றுவன. |
|
(இ - ள்.) குழவிப்பிடி மாழ்கும் என - குழவியையுடைய பிடிகள் மயங்கும் என்றும் கருதி; குஞ்சரம் தழுவி - களிறுகள் அவற்றைத் தழுவி வெப்பத்தைத் தாங்குவன; கிளர் சேவல் பெடையைத் தழீஇ - ஊக்கமுறுஞ் சேவல்கள் தம் பெடையைத் தழுவி; தொழுதிச் சிறகால் துயர் ஆற்றுவன - தம் திரட்சியுறு சிறகினாலே காத்துத் துயரைத் தணிப்பன.
|