பக்கம் எண் :

பதுமையார் இலம்பகம் 681 

   (வி - ம்.) தழீஇ : சொல்லிசை அளபெடை.

   குழவி - கன்று, இளமையுமாம். பிடி - பெண்யானை. குஞ்சரம் - ஈண்டுக் களிறு என்னும் பொருட்டு; ”மடப்பெடை அசைஇய வருத்தத்தை மென்சிறகரால் ஆற்றும் புறவு எனவும் உரைத்தனரே” என்றார் கலியினும் (11-12-13.)

( 22 )
1188 கலையின் பிணை கன்றிடு மென்றுகசிந்
திலையின்னிழ லவ்வயி னின்மையினா
னிலையின்னிழ றானது நின்றுகொடுத்
துலையும்வெயி னின்றுரு கும்முரவோய்

   (இ - ள்.) உரவோய்! - அறிஞனே!; இலையின் நிழல் அவ்வயின் இன்மையினான் - இலையுடைய நிழல் அங்கேயில்லாததால்; இன்பிணை கன்றிடும் என்று கசிந்து - தன் இனிய பிணைமான் வருந்தும் என்று மனம் வருந்தி; அது நிலையின் நிழல் நின்று கொடுத்து - அக்கலை தான் நின்று தன்னிலையிற் பிறந்த நிழலை அதற்குக் கொடுத்து; உலையும் வெயில் நின்று உருகும் - வாட்டும் வெயிலில் நின்று உருகும்.

   (வி - ம்.) 'வெயில் நின்று உருகும்' என்பதை முற்பாட்டிற் குஞ்சரத்திற்கும் சேவலுக்கும் இயைக்க.

   கலை - ஆண்மான். இன்பிணை - இனிய பெண்மான். கன்றுதல் - வருந்துதல். அவ்வயின் - அப்பாலையின்கண். ”அக்காட்டில் இன்னிழல் இன்மையான் வருந்திய மடப்பிணைக்குத் தன்னிழலைக் கொடுத்தளிக்கும் கலையெனவும் உரைத்தனரே” என்றார் கலியினும் (11-16-7)

( 23 )
1189 கடநாக மதங்கலந் துக்கநிலத்
துடைநாணென மின்னென வொண்மணியம்
படநாக மழன்று பதைத்துவரு
மடனாமய லார்மனம் வைப்பதுவே.

   (இ - ள்.) கடநாகம் மதம் கலந்து உக்க நிலத்து - மத யானைகளின் மதம் வெம்மை மிகுதியாலே சிறு நீருடனே கலந்து சொரிந்த நிலத்திலே; ஒண்மணி அம் படநாகம் - ஒளிவிடும் மணியையுடைய அழகிய படமுறும் நாகம்; உடை நாண் என மின் என - (ஈரமாக நினைத்து வந்து வீழ்ந்து) முறுக்குவிட்ட கயிறெனவும் மின்கொடி எனவும்; அழன்று பதைத்து வரும் - வெந்து பதைத்துப் போகும்; அயலார் மனம் வைப்பது மடன் ஆம் - (ஆகையால்) விதிகண்டவரல்லது மற்றவர் அந் நெறி செல்லக் கருதுதல் அறியாமையாம்.

   (வி - ம்.) 'மதங்கள் கலந்த நிலத்து' என்றும் பாடம். ஆகையால், நீயும் அவ்வழி செல்லாதே என்றானாயிற்று. நச்சினார்க்கினியர் 1186